எப்போதும் போல் எழுந்ததும் அடுக்களைப் பிரவேசம் எனக்கு. மாமரக் காற்று முகம் வருடியது சாளரம் வழியே... ஊறிக்கிடந்த ‘பத்துப்' பாத்திரங்களை ‘ஒருகை' (இரண்டு கைகளாலும் தான்) பார்த்தேன். தலைக்கு மேல் பலகையில் கவிழ்ந்து கிடந்தன உபயோகம் குறைந்த பித்தளை அண்டா குண்டான்கள். தோட்டத்து அணில்களின் தற்காலிகக் குடியிருப்புகள் அவை. மகப்பேறுக்குத் தாய்வீடு போல.
நானற்ற பொழுதுகளில் சர்வ சுதந்திரம் அவற்றுக்கு. நானிருக்கும் சமயங்களில் வாத்தியார் உள்ள வகுப்பறையாய் கப்சிப். தினம் குறிப்பிட்ட நேரங்களில் தனக்கும் குட்டிக்குமாய் உணவு தேடிக் கொள்ள தாய் அணில் வெளிச் செல்லும். கீச்சிட்டுக் குரல் கொடுக்கவும், மெதுவாக ஏறி இறங்கவும் கற்றுத் தேர்ந்தது நாளடைவில் குட்டி அணில். அம்மாக்காரி இல்லாத போது, பைய இறங்கி வந்து, என்னுடன் கதைத்துக் கொண்டும், ஒளிந்து விளையாடிக் கொண்டும் இருக்கத் தொடங்கியது. பாதுகாப்பான இடைவெளியில் எங்கள் நட்பு தொடர்ந்தது.
இன்று தாமதமாக எழுந்ததில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். ஐந்தரைக்கு காபி+காலை சிற்றுண்டி கட்டிக் கொடுத்து இவரை வேலைக்கனுப்பணும். ஆறரை மணிக்குள் மகன் கிளம்பியாக வேண்டும். எட்டுக்கெல்லாம் மகளும் கிளம்பி விடுவாள். இவர்களிருவருக்கும் மதிய சாப்பாடும் சேர்த்து செய்யணும். இடைவெளியில் நானும் மாமியாரும் டீயும் குடித்து விடுவோம்.
இவரும் மகனும் அடுத்தடுத்துக் கிளம்பிப் போயாச்சு. வழியனுப்பிக் கதவு மூடி, மகளின் மதிய சாப்பாட்டிற்கான மீத வேலைகளுக்காக மறுபடி நுழைந்தேன் அடுக்களையினுள்.
கீச் கீச் என்றது அண்டாவின் மேல் ஏறி நின்று. அம்மாக்காரியும் போயாச்சு போல. ‘வா வா... எழுந்தாச்சா' என்றவாறு, மகளுக்குப் பிடித்தமான காயைக் கழுவி நறுக்கத் துவங்கினேன். ‘கீச் கீச்...' சப்தம் மீண்டும் கேட்க, அனிச்சையாகக் கண்கள் அண்டாவைத் துழாவியது. அணிலைக் காணோம்... சரிதான்... ஆட்டம் தொடங்கியாச்சு... சுற்றுமுற்றும் பார்க்கவும், என்னைத் தவிக்க விடாமல் அலமாரி மளிகை டப்பாக்களிடையே மூக்கை நீட்டி மறுபடி கத்தியது. ‘இறங்கிட்டியா...' கேட்டபடி குக்கரைத் திறந்து சாதத்தை பாத்திரம் மாற்றி ஆறவிட்டேன். பொரியல் இறக்கும் நேரம், மறுபடி சத்தம். இப்போது ஃப்ரிஜ் மேல் நின்று ஆட்டம். ஓட்டத்துக்கும் ஆட்டத்துக்கும் ஈடு கொடுத்துச் சுழன்றாடும் அதன் வாலின் வசீகரம், ‘வேலையெல்லாம் கிடக்கட்டும்... என்னை எடுத்துக் கொஞ்சமாட்டாயா' என்பது போலொரு அழகு.
ஹ்ம்ம்...எட்டுமணிக்காரியிடம் யார் மாட்டி விழிப்பது... கவனத்தை வேலையில் செலுத்தினேன். சிறிது நேரம் சென்று எங்கிருக்கிறதென நோட்டம் விட்டேன். அருகாமை சுவரில் மாட்டியிருந்த மாமனார் படச் சட்டத்தில் தொங்கிய சந்தன மாலையில் இலாவகமாக தொற்றிக்கொண்டு அவரிடம் ஏதேதோ சம்பாஷிக்கத் தொடங்கியிருந்தது.
‘நான் ரெடிம்மா... சாப்பாடும், தலை சீவலும் தான் பாக்கி...' என்றவாறு உள்நுழைந்த மகள், மின் விசிறியைச் சுழல விட்டு சாப்பாட்டு மேசையிலமர்ந்தாள்.
பாய்ந்து மின் விசிறி இயக்கத்தை நிறுத்தியபடி சொன்னேன். ‘குட்டி அணில் கீழே இறங்கியிருக்கு... மாட்டிடப் போகுது
'‘இவ்வளவு நேரம் அது கூடத் தான் பேசிட்டிருந்தியா...?! குருவி, அணில், பாத்திர பண்டம்ன்னு விசித்திரமான நட்பு வட்டம்மா உன்னுது...' எழுந்து மறுபடி மின் விசிறியைப் போட்டாள்.
‘ஐய்யோ, இன்னைக்கு மட்டும் ஹாலில் போய் சாப்பிடேன்...' மாமனாருடன் குலாவிக்கொண்டிருந்த அதைத் திரும்பிப் பார்த்தபடியே கெஞ்சினேன்.
‘இன்னைக்குதான்... இதனால்தான்னு அதுக்கு விதியிருந்தா நம்மால மாத்திடவா முடியும்...' இயல்பாக எடுத்துப் பரிமாறிக் கொண்டு சாப்பிடத் துவங்கினாள்.
சம்பந்தமில்லாத எந்த உயிரும் துச்சமாகி விடுகிறது மனித மனதுக்கு!
அவள் சாப்பிடுவதற்குள், மதிய சாப்பாட்டுப் பையை தயார் செய்தேன். எட்டாக ஐந்து நிமிடங்களிருந்தன. அதற்குள் தலை வாரி விடலாம்... இது எங்கிருக்கிறதென ஆராய்ந்தேன். போட்டோவுக்குப் பின் நுழைந்து நகர்ந்து கொண்டிருந்தது.
நீண்ட பின்னலை மடக்கிக் கட்டி ரிப்பனில் பூப் போடும் போது அடுக்களைப் பக்கம் ஓடியது மூஞ்சூறு. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் இடம்பெறாத ஏராளமான உறுப்பினர்களுள் ஒன்று.
(மற்றதெல்லாம் தெரியணுமா உங்களுக்கு... பிள்ளையார் எறும்பு, சிவப்பெறும்பு, கறுப்பெறும்பு, முசுடு வகையறா, பல்லி, கரப்பான் பூச்சி, பாச்சை, சமயங்களில் பூரான், மழைக்காலங்களில் மரவட்டை, அட்டை, கம்பளிப் பூச்சி, வண்டு வகையறா ஒரு ஐம்பது... மூச்சு வாங்குது, நிறுத்திக்கிறேன். கதையைப் பார்ப்போம்.)
மூஞ்சூறு ஓடியதும் மாற்றி மாற்றி கீச் மூச் சப்தம். சரி... குட்டிப் பையன் பயந்துட்டான் மூஞ்சுறுவைப் பாத்துன்னு நெனைச்சுக்கிறேன்.
ஷீவை மாட்டி, சைக்கிளை எடுத்து வெளியே வெச்சாச்சு. ‘லன்ச் பேக்... லன்ச் பேக்...' பறக்கிறாள் மகள். ‘தோ... தோ... ‘ஓடினேன் உள்ளே. அடுக்களை சாளரம் வழியே தாவியோடுகிறது சனியன் பிடிச்ச பூனை.
( எப்போதாவது வருமென்பதும், எனக்கு சுத்தமாக ஆகாதென்பதும் உறுப்பினர் லிஸ்டில் சேர்க்காத காரணம்)
அந்த அவசரத்திலும் ச்சூ... ச்சூ என விரட்டுகிறேன். சுழன்று வளைந்து அதனுடன் ஓடும் வால் வெறுப்பேற்றுகிறது.
தெரு வரை சென்று மகளை வழியனுப்பி விட்டுக் கதவு மூடி, அப்பாடா...இனி அணில் குட்டியுடன் கதைபேசிக் களைப்பாறலாமென ஆயாசத்தோடு உள்நுழைந்து, ‘அப்புறம்... சொல்லு...' என்றவாறு பாத்திரங்களை ஒழித்துப் போ...
என்ன... பதிலில்லை...
‘ட்ரையாம் பக்...' (அதன் செல்லப் பெயர்) ‘ட்ரையாம் பக்'....
திருட்டுப் பூனை... மூஞ்சுறுவுக்கு குறி வைத்து...
திகைப்பும் துக்கமும் சுனாமியாய் எழுந்து என்னை அழுத்துகிறது. நினைவலைகள் ஈழப் போரில் பலியான ஒரு பாவமும் அறியாத செஞ்சோலைக் குழந்தைகளை மீடெடுக்கின்றன.
கைமீறிப் போன பலத்துக்கும் தயாராய் விழியோரம் கட்டி நிற்கும் துளி ஈரம், மிச்ச மீதி மனிதத்தின் சிறு அடையாளமாய்...
"வேறென்ன கிழிக்க முடியும்?" அறச்சீற்றம் எழும்பி எனது கையாலாகாதத்தனத்தின் மேல் 'பொத்' என விழுந்து மடிகிறது.

கீச் கீச் என்றது /அணில்/ அண்டாவின் மேல் ஏறி நின்று.என்று இருக்க வேண்டுமோ?
ReplyDeleteஅணில் மட்டுமில்ல ஒவ்வொரு ஐந்தறிவு விலங்குககளோட பேசறது அதுவும் நமக்கு பரிட்சையமானவற்றோடு பேசறது சந்தோஷமா இருக்கும்!
நல்லா எழுதியிருக்கீங்க!
கடைசியில் ட்ரையாம்பேக்கை பூனை தின்றுவிட்டதா? :(
ஆமாம்பா ... சில ஆண்டுகளுக்கு முன் செஞ்சோலைக் குழந்தைகள் திடுக்'ன்னு விழுந்த குண்டுகளால செத்துப் போன மாதிரி.
ReplyDeleteஉங்களின் பதிவை படித்தபோது
ReplyDeleteமெல்லிய உணர்வு ஒன்று எழுகிறது தோழி
நெய்வேலியின் மரங்கள் சூழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.சின்னவன் அங்குதான் பிறந்தான்-அது என் மாமனார் நெய்வேலியிலிருந்த காலம்.அற்புதமான நிசப்தத்துக்கும் மயான அமைதிக்கும் இடைப்பட்ட பொழுதுகள்.உங்கள் பதிவில் இறந்த அணில் முன்பே என் கண் முன் பூனையால் பத்து வருஷங்களுக்கு முன் தின்னப்பட்டது.எட்டு மணிக்கு முந்தைய வேக நடை.
ReplyDelete@வேல் கண்ணன்...
ReplyDeleteரொம்ப சந்தோசம் சகா.
@சுந்தர்ஜி...
நம்ம ஊர் மாப்பிள்ளையா நீங்க...! மகிழ்ச்சி. இருப்போர்க்கும் , வருவோர்க்கும் இனிமையானது நெய்வேலி...!!
அருமையான பகிர்வு சகோ! நானும் நெய்வேலி தான்! பிறந்ததிலிருந்து 20 வருடங்கள் வரை அங்கிருந்து விட்டு தற்போது தில்லியில் இருக்கிறேன். படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது - திரும்பவும் நெய்வேலி வந்தது போல இருந்தது.
ReplyDeleteவெங்கட்
புது தில்லி.
www.venkatnagaraj.blogspot.com
மிகவும் நன்றாக உள்ளது சகோதரி. நெய்வேலியில் உள்ள அன்றாட நிகழ்ச்சிகளை என் மாமியார் கதை கதையாக கூறியுள்ளார்.
ReplyDeleteநிலா...இன்றுதான் வாசித்தேன்.பிடிச்சிருக்கு.நீண்ட பின்னல்..மூஞ்சூறு..எறும்பு வகைகள்...பூரான்...மரவட்டை...
ReplyDeleteகம்பளிப்பூச்சி...எல்லாமே ஊரை ஞாபகப்படுத்துகிறது.
@வெங்கட் நாகராஜ் ...
ReplyDeleteபிறந்து வளர்ந்த ஊரின் நினைவலைகள் நம் மனக்கடலில் ஓயாமல் அலையடித்தபடி தான்... அமாவாசை, பௌர்ணமி போல் ஊர் நினைவைக் கிளறிவிடும் நிகழ்வுகள் இப்படியாக சமயங்களில் அமைந்துவிடுகின்றன. எப்படியிருப்பினும் என் வசிப்பிடம் எனக்கொரு
சகோதரனைக் கொடையளித்திருக்கிறது! மகிழ்கிறேன் வெகுவாய்.
@கோவை 2 டெல்லி ...
ReplyDeleteஎந்த ஊருக்கு சென்று யாரிடம் பேசினாலும் நெய்வேலியில் சொந்தம் இருப்பதாகவோ இருந்ததாகவோ கூறக் கேட்கும் அதிசயம் அடிக்கடி எனக்கு நேர்வதுண்டு. இப்படியாக நாம் இன்னும் நெருங்கிவிட்டோமோ தோழி...!
@ஹேமா...
ReplyDeleteஊர் நினைவும் சிறு பிராயமும் மகிழ்வைக் கிளர்த்தியதா...? பெருமூச்சு எழச் செய்ததா?
'ஜனவரி 29 ' என்ற குறும் படத்தை பார்க்கும் வாய்ப்பு நேற்று தான் கிடைத்தது. அந்தப் பையன் முத்துக்குமார் என்னைக் கலங்கடித்து விட்டான். அன்றைய தினத்தில் 250 கி.மீ தள்ளியிருக்கும் எங்களால் உணர முடியாத உண்மையின் தாக்கத்தை அப்படம் தான் தந்தது.
என்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போலிருந்தது நீங்கள் அணிலுடன் பேசியதை படித்த போது. பல்லி, தவளை, தேரை, சில சமயம் பாம்பு என்று நான் பேசும் போது என் பிள்ளைகள் என்னை கேலி செய்வதுண்டு. சூப்பர் நிலா....
ReplyDeleteவாங்க கிருஷ்ண பிரியா... தத்தமது அனுபவங்களை நினைவில் கிளர்த்தியிருக்கும் எனதன்பு ட்ரையாம்பக் மறுபடி எங்கேனும் உயிர்த்திருக்கும்...!
ReplyDeleteவருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழி!
ஒரு தாய்மை வலி எழுத்தில்.:((
ReplyDelete