நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பருவம் தப்பிய மழை

Friday, 27 August 2010

தட்டு முட்டுச் சாமானெல்லாம்

சொட்டும் மழை தேக்கி நிற்க
கொட்டும் விடா மழையால்
கூரை நைந்து கீழே விழ

ஒட்டுத்துணியும் விடாமல்
ஈரம் தேக்கிப் பூஞ்சை பூக்க
ஈர விறகால் புகை பெருக்கி
உலையரிசி வேகாதிருக்க

ஆடு மாடு கோழியெல்லாம்
அடைமழையால் விரைத்துக் கிடக்க
வயக்காட்டில் பயிர் அழுகி
குடியானவன் வயிரெரிக்க

வெடவெடக்கும் குளிர் குறைக்க
ஒரு டீ குடிக்கவும் சில்லறையற்ற
உழவனுக்கு யாரால் வரும்
நல்ல காலம் ?

9 கருத்துரைகள்:

 1. இந்தக் கவிதையெழுதி கண்ணீரில் நனைய வைக்கும் உங்கள் போன்ற கவியுள்ளம் மற்றொரு மாற்றை அவர்களுக்குக் கொடுக்கட்டும் என ப்ரார்த்திக்கிறேன்.

  உழவைப் போற்றும் பொற்காலம் இனியும் வருமா? வராதே கற்காலமாய்க் கருகிச் செல்லுமா? நாணயத்தைச் சுண்டி விடுகிறேன் நம்பிக்கையுடன்.

 1. Priya said...:

  நன்றாக எழுதி இருக்கிங்க.படித்து உணர்கையில் ஆதங்கம்தான் ஏற்படுகிறது.

 1. ரொம்ப நல்லாயிருக்கு. உழவனுக்காக அக்கறை எடுத்திருக்கீங்க.

 1. உழவனுக்கான பொற்காலம் திரும்பட்டும்.. எத்தனையோ விஷயங்களில் மீண்டிருக்கும் அற்புதம் உழவன் வாழ்க்கையிலும் நிகழ எனது பிரார்த்தனைகளும்.

 1. நல்ல காலம் வரணும் ....இது தான் தோணுகிறது..பிரார்த்திப்போம்

 1. @சுந்தர்ஜி...
  நகர நாகரிகத்திலும், மாத சம்பள சுகபோகத்திலும் வாழ்வு நகர்ந்தாலும், பிறந்து வளர்ந்த வயல்வெளிப் பசுமை மனப் பெட்டகத்திலிருக்கிறது இன்னும் போற்றுதலுக்கு உரியதாய்...
  எந்த ஆட்சியிலும் அடிப்படை விவசாயிக்கு சென்று சேராத கண்துடைப்பு நிவாரணங்கள் எழுப்பிய ஆதங்கம் தான்

 1. @பிரியா...
  காடு கழனிகளைக் கண்டதுண்டா ... தாத்தா , பாட்டி, அத்தை , மாமா வீடுகளுக்குச் சென்ற போதாவது...? படித்து உணர்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே எனக்கு ஆறுதலாய்... நன்றி சகோதரி.

  @கோவை 2 டெல்லி ...
  உழவன் எக்கேடு கெட்டால் என்ன... கிலோ அரிசி 100 ரூபாயானாலும் கவலையில்லை... சம்பாத்தியத்தை கூட்டிக் கொள்ளச் சாத்தியப்படும் நகரத்து மக்களுக்கு. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

 1. @ரிஷபன்...
  நல்லுள்ளங்களின் கோரிக்கை நிராகரிக்கப் படுவதில்லை இறையருளால்... மிக்க நன்றி!

  @பத்மா...
  நெகிழ்கிறேன் தங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு... நன்றி சகோதரி!

 1. 'ஆவீன மழை பொழிய...'இது தானே விவசாயிகள் வாழ்வு!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar