நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

கடவுளும் காருண்யமும்

Sunday, 1 August 2010

எரியும் ஊதுபத்திப் புகையில்

நெளிகிறது
பார்வையற்ற விற்பனையாளனின்
தீனக்குரல்

சூம்பிய ஒற்றைக் கையில்
மாட்டவியலா சூடத் தட்டை
கழுத்தில் மாட்டி விற்றுப் பிழைக்கும்
சிறுமியின் தன்மானத்தில்
ஒளிர்ந்து மினுக்குகிறது
தீப ஆராதனை

வெளியே பலருக்கு
உழைப்பே தெய்வம்...
உட்கார்ந்த வாக்கில்
உண்டி நிரப்பும் பூசாரிக்குப்
பிழைப்பே தெய்வம்!

9 கருத்துரைகள்:

 1. நியாம்தான்.
  ரொம்ப நல்லா இருக்குங்க..

 1. ஹேமா said...:

  நிலா...சரியாச் சொல்லியிருக்கீங்க.
  மாற்றுக்கருத்தே இல்லை !

 1. கடைசி பாரா கச்சிதம்...!

 1. ரொம்ப பிடிச்சிருக்குங்க.

 1. மிக்க நன்றி...
  கமலேஷ்...

  புரிந்துணர்வுக்கு மகிழ்ச்சி ஹேமா...

  ரொம்ப சந்தோசம் தம்பி...

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும், மகிழ்வும் நன்றியும் பா.ரா.

 1. முதலிரண்டும் மிக அருமை.
  ஆனால் அப்படி ஒரு பூசாரி உட்கார்ந்தால் தான் இவர்களின் உழைப்பு மிளிரும் இல்லையா.. நிலா.. (பூசாரி வெறும் பொம்மையாய் இராமல் நம்பிக்கை விதையூன்றி அனுப்ப வேண்டும். வசூலை சரிவிகிதமாய் வரும் பக்தர்களுக்கே ஏதேனும் ஒரு வகையில் பயனாக்க வேண்டும்.முக்கியமாய் ஏமாற்றுக்காரனாய் இல்லாமல் இருக்க வேண்டும்)

 1. // ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
  ரொம்ப நல்லா இருக்கு!//
  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றியும், மகிழ்வும் ஐயா

 1. உங்க மாற்றுச் சிந்தனை என்னைக் கவர்கிறது சகோதரரே.. உடன்படுகிறேன் நானும். என்றோ விதைக்கப் பட்ட மத ரீதியான கருத்துக்களுக்கு, காலங்காலமாய் அறுவடை நடப்பதும் மறுக்க முடியாதே. அடைப்புக் குறிக்குள் தங்களின் கடைசி வாக்கியம் மிகவும் கவனிக்கத் தக்கது. தங்கள் துலாக்கோல் வழுவாமல் நிற்பது மகிழ்வு.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar