இம்முறை கொடைக்கானல் பயணத்தில் புதிதாக பார்த்த இடம் இது. பில்லர் ராக் போகும் வழியில் இருக்கிறது இந்த வேகஸ் வேர்ல்ட்.
சமுதாயத்தால் மதிக்கப் படுபவர்களையும் மதிப்பிழந்தவர்களையும் இங்கு மெழுகு உருவில் தத்ரூபமாக காண முடிகிறது.
கடைசி விருந்தின் பன்னிரண்டு சீடர்களையும் இயேசுவுடன் சேர்த்து ஒரே படமாக்க முடியவில்லை. (வலது பக்கமிருந்த பாதி பேர் அடங்கிய படம் அப்லோட் ஆகவில்லை)
இயேசு பிறப்பை விளக்கும் தொழுவம் ஒன்றும் சித்தரிக்கப் பட்டிருந்தது. மாடு கன்றோ ஆடோ ஏதேனும் ஒன்றிருந்திருக்கலாம். மற்றபடி வெகு துல்லியம். தொழுவத்தில் வெளிச்சம் போதாமையால் எடுத்த படம் இருட்டடிக்க , அப்லோட் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய வேண்டியதாயிற்று.
சமூக அக்கறையுடனான ஒரு சித்தரிப்பு! அற்ப சந்தோஷத்துக்காக பலியாகும் இளம் தலைமுறையினர் யோசிக்க வேண்டிய இடம்.
கையேந்தி அமர்ந்திருக்கும் மூதாட்டியின் சுருக்கம் விழுந்த முகத்தில் தெறிக்கும் உணர்வுகள் பார்ப்பவர் மனத்தைக் கரைக்கும் தன்மையுடையது. கோபிகைகளுடன் கிருஷ்ண லீலை சித்தரிப்புக்கு அடுத்திருந்த இம்மூதாட்டியின் உருவம் அவர்கள் வைத்திருந்த அறிவிப்பை உயிர்க்கச் செய்வதாய்...
பரணில் எட்டிப் பார்ப்பது யார் தெரியுமா? சந்தனக் கடத்தல் வீரப்பன்!
கச்சேரி களை கட்டுகிறது. எல்லாமே மெழுகு உருவங்கள் . இசைக் கருவிகள் மட்டும் உண்மை. வாசிக்க விருப்பமுள்ள பார்வையாளர்களை கட்டணம் வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் அனுமதித்தார்கள்
விற்பனைக்காக மெழுகினால் செய்யப்பட்ட பொருட்களில் சில .
கல்கத்தா உள்ளிட்ட சில நகரங்களில் இவ்வமைப்பினர் இதுபோன்று மேலும் பல உருவங்களை செய்து பார்வைக்கு வைத்துள்ளனராம். இங்கு நுழைவுக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு வாங்கும் முப்பது ரூபாய் மட்டுமே வரும்படியாம் நன்கொடை தர விரும்பினால் தரலாமாம்.
நன்றி:' மதுமிதா' (புகைப்பட உதவிக்காக ...)
எத்தனையோ தடவை கொடைக்கானல் சென்று உள்ளேன்... இங்கு சென்றதில்லை...நல்ல படங்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...வாழ்த்துக்கள்...
புதிய தகவல்கள்.. அருமையான படங்கள்..
ReplyDeleteஅற்புதமான கலைநயத்தோடு அருமையான செய்திகளும் உள்ளடக்கிய இவ்வரங்கு அமைத்தவர்களுக்கு மிகுந்த பாராட்டுகள். அழகானப் படங்களோடு அவ்வமைப்பு பற்றியும் அறியச் செய்த உங்களுக்கு நன்றி நிலாமகள்.
ReplyDeleteஇனிய பகிர்வு. கொடைக்கானல் சென்றால் பார்க்கவேண்டிய இடமென குறித்துக் கொண்டேன் சகோ. படங்கள் அழகு....
ReplyDeleteமனதினை உறைய வைத்த பதிவு !
ReplyDelete(மெழுகு!!)
கொடைக்கானல் சூப்பர்:)
ReplyDeleteஅருமையான படங்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete