12 கருத்துரைகள்
  1. கஷ்டப்பட்டு செய்து வந்த யாவாரமும் மகனால் போச்சா....:(
    நல்லதொரு கதை.

    ReplyDelete
  2. உதவாக்கரைப் பிள்ளையைப் பெற்றுவிட்ட மாரியைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை இதைவிடவும் உருக்கமாய்ச் சொல்லமுடியாது. தட்டாமாலை சுற்றும் பாத்திரம், கழற்றியபின் கப்பலாகும் செருப்பு போன்ற நுணுக்கமான வர்ணனைகளுடன் கூடிய எழுத்தும் கதையின் பலம். மாரிகளுக்காகவும் காசாம்புகளுக்காகவும் பரிதாபப்படமட்டுமே முடிகிறது.

    ReplyDelete
  3. வாசிக்க வாசிக்க வறுமை இப்படித்தானோ என்பதுபோல.படித்தமுடித்தபிறகும் அதன் தாக்கம் தொடர்கிறது நிலா !

    ReplyDelete
  4. வாசித்ததும் மனது கனமானது சகோ.. உதவாத பிள்ளையிருந்து என்ன லாபம் என்று தோன்றுகிறது....

    ReplyDelete
  5. எளிய மனிதர்களை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்,நன்று

    ReplyDelete
  6. மனசின் வேகம் கையிலும் காலிலும் கசிய வழக்கத்தை விட சீக்கிரமே ஊருக்குள் வந்தாயிற்று.

    எழுத்தின் வேகம் அப்படியே மனசில் இறங்கி பொருமலில் விம்முகிறது. சே.. என்ன ஒரு தலையெழுத்து.. மாரியை நினைத்து.

    ReplyDelete
  7. அருமையான பதிவு. விரும்பிப் படித்தேன். நன்றி!

    ReplyDelete
  8. என் மனதை உருக்கி நீண்ட நேரம் அழவைத்து விட்டது தங்களின் இந்தக்கதை.

    சில நல்லவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, எமனாகப்பிறக்கும் சில பிள்ளைகளால் பல தொல்லைகளே.

    குழந்தைகள் இல்லாதவர்கள் பாடே தேவலாம் என்று தோன்றிவிடும்.

    பலரின் வாழ்வினில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

    வறுமை மட்டுமல்ல, சில செல்வந்தர்கள் வீட்டுப்பிள்ளைகளும், வேறு விதங்களில் (மன நோயாளிகளாகவோ, வேறு பல கெட்ட வழிகளில் போயோ) பெற்றொர்களுக்கு பலவித தலைகுனிவை ஏற்படுத்தி வருவதுண்டு.

    பெற்ற தாயும் தந்தையும் என்ன தான் செய்ய முடியும்?

    பெற்று விட்ட ஒரே குற்றத்திற்காக கடைசிவரை பொறுத்துப்பொறுத்துப் போவார்கள்!

    மற்றவர்களுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கைக் காட்சியாவது வாடிக்கையே.

    தங்களின் அபாரமான எழுத்துக்குத் தலை வணங்குகிறேன். vgk

    ReplyDelete
  9. வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நிலாமகள் said...
    ////பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் என்னால் இன்று குசேலனாகவும் ஆக முடியாமல் குபேரனாகவும் ஆக முடியாமல் ////:)

    ==========

    //உங்க‌ அக்க‌றையும் செய்நேர்த்தியும் ப‌திவில் ஜொலிக்கிற‌து ஐயா.//

    மிக்க நன்றி, மேடம்.

    //த‌மிழில‌க்கிய‌த்தில் ம‌ழ‌லைக‌ள் ப‌ற்றிய‌ க‌ருத்த‌மைந்த‌ பாட‌ல்க‌ளையெல்லாம் தேடித் தேடி இணைத்த‌ திறனாய்வுப் ப‌திவாக்கிய‌ உழைப்பு பாராட்டுக்குரிது. //

    ஆம் மேடம். சற்று கஷ்டப்பட்டே சேகரித்தேன்.

    //கிராபிக் ப‌ட‌ங்க‌ள் அழ‌கு. குழ‌ந்தை என்றாலே அழ‌குதானே!

    அநிருத் ப‌ட‌ம் போட்டால் இன்னும் ம‌கிழ்வோம். //

    அவன் பிறந்த 11 ஆம் நாள் புண்ணியாஹாவாசனத்திலும், பிறகு ஒரு மாதமே ஆன நிலையிலும் எடுத்த போட்டோ இரண்டை ஏற்கனவே வெளியிட்டு இருந்தேன்.

    லிங்க்:
    http://gopu1949.blogspot.com/2011/07/1.html

    அதற்கு என் மேலிடத்திலிருந்து [மனைவியிடமிருந்து]சிறிய ஆட்சேபனை வந்தது. அதனாலும், இப்போது இன்னும் அவன் 7 மாதக் குழந்தையாக ஜொலிப்பதாலும், வெளியிட ஓர் தயக்கம். தங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் தங்கள் ஆசீர்வாதம் வேண்டி தங்களுக்கு மட்டும் அநிருத்தின் படத்தை அனுப்பி வைப்பேன்.

    //ந‌ம்முள் அமிழ்ந்திருக்கும் குழ‌ந்த‌மையெல்லாம் ஒரு குழ‌ந்தையே வெளிக்கொண‌ர‌ முடிகிற‌து! ரீசார்ஜ் ஆகிவிடுகிறோம் நாம்!//

    தங்களின் கருத்துக்களை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீகள்.

    படித்ததும் பரவஸம் அடைந்தேன்.

    ரீ-சார்ஜ் என்பது தான் மிகச்சரியான சொல்லாடல்.
    அது என்னை மிகவும் கவர்ந்தது.

    அன்புடன் vgk

    [தங்களின் நேற்றையப் பதிவான “யாவாரம்” சிறுகதை என்னை மிகவும் பாதித்து விட்டது. என் மனதைக் கலங்க அடித்து விட்டது. என் உணர்வுகளை உங்களுக்கு எப்படி வெளிப்படையாக வார்த்தைகளில் விவரித்துச் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை.

    தங்களின் அதுபோன்ற மிகச்சிறப்பான எழுத்துகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.}

    அன்புடன் vgk
    November 27, 2011 6:18 AM

    ReplyDelete
  11. வறுமையினதும் இயலாமையினதும் பந்தம் கொடுக்கும் துயரினதும் வலி!

    சமுதாயத்தை நோக்கிக் கேள்வியை விட்டுச் செல்கிறது பதிவு.

    இந்தியத் தமிழை புரிவதில் சற்றே சிரமப் பட்டேன்.எனினும் ஒவ்வொரு சொல்லும் கதையை இயல்பாய் நகர்த்திச் செல்கிறது தோழி.

    ReplyDelete
  12. நல்ல கதை நிலாமகள். வாசிக்க இதம். நன்றி.

    ReplyDelete