ஒரு எண்ணத்தை விதையுங்கள்...
ஒரு செயலை அறுவடை செய்வீர்கள்.
ஒரு செயலை விதையுங்கள்...
ஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள்.
ஒரு பழக்கத்தை விதையுங்கள்...
ஒரு பண்பை அறுவடை செய்வீர்கள்.
ஒரு பண்பை விதையுங்கள்...
ஒரு எதிர்காலத்தை அறுவடை செய்வீர்கள்!
தொட்டால் பூ மலரும்:
பிறந்த குழந்தையால் பாலின் வாசனையை வைத்து தன்னுடைய தாயை இனம் காண முடிகிறது. மூன்று வாரங்களில் தாயுடனும், பன்னிரெண்டு வாரங்களில் தந்தையுடனும் நெருக்கத்தை உண்டுபண்ணிக் கொள்கிறது. குழந்தைக்குத் தெரிகிறது, இது என்னுடைய தாய்; இது என்னுடைய தந்தை என்று! ஆரம்ப சில மாதங்களில் பெற்றோருடைய அருகாமையை குழந்தை மிகவும் நாடுகிறது. தன்னுடைய தேவைகளுக்குப் பெற்றோரைச் சார்ந்திருக்கிறது. பாதுகாப்பு உணர்வு, பழக்கவழக்கங்களை அவர்களிடமிருந்து பெறத் தொடங்குகிறது. மனதளவில் நெருங்க ஆரம்பிக்கிறது. இந்த வாய்ப்பைத் தவற விட்டால், பின்னாளில் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த நெருக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது.
அன்பு செலுத்துவோருடன் குழந்தை இணைய ஆரம்பிக்கிறது. அது அடிப்படையான உறவு முறைகளையும், நம்பிக்கையையும் வளர்க்கிறது. ஒரு பயமற்ற, பத்திரமான குழந்தைக்குத் தெரியும்; தான் விரும்பும் போது அப்பாவும் அம்மாவும் தன்னருகில் இருப்பார்கள் என்று! ஒரு பாதுகாப்பான குழந்தை வளர்கிறது; துணிவுடன் வாழ்க்கைப் படிகளைக் கடக்கிறது.
உங்கள் குழந்தையுடன் நெருங்கி உறவாட நீங்கள் செய்ய வேண்டியவை:
1. பேசுங்கள்!
பிறந்த குழந்தைக்குப் புரியுமா என்று நினைக்காதீர்கள்; குழந்தையுடன் நாம் பேசுவதற்கு நிறைய நேரம் செலவழித்தால், புரிதலுடன் வாழ்கிறது. தான் பார்த்தவை, கேட்டவை அனைத்தையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறது.
2. விளையாடுங்கள்!
இவை வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள். சிறு விளையாட்டுகள், வயதிற்கேற்ற அனுபவங்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். உங்களுடன் இருக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
3. கதை சொல்லுங்கள்!
கதை கேட்பது ஒரு அனுபவம். ஒரு கதையின் மூலம் உலகத்தை நாம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். வாழ்க்கையின் அனுபவங்களை, சவால்களை, வாய்ப்புகளைப் புரிய வைக்கிறோம். கதை கேட்பது நியாய உணர்வுகளை உருவாக்குகிறது. சாதனையாளராக தானும் உருவாக வேண்டுமென்ற தூண்டுதலை ஏற்படுத்துகிறது.
ஒன்றாக இருப்பதற்குப் போதுமான அவகாசத்தை நாம் அளித்தோமானால் குடும்பத்தில் ஒருவராக வரவேற்கப்படுகிறோம் என்று குழந்தை உணர ஆரம்பிக்கிறது. குழந்தைகள் நம்பிக்கையைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். குழந்தையின் ஆரம்ப கால வாழ்விலேயே இது உருவாக்கட்டும்.
குழந்தை இவ்வுலகத்தை தாயின் மூலமே அறிந்து கொள்கிறது. தனக்குத் தேவையானவற்றை, தாய் செய்து தரும் முறையில், குழந்தை தன் உணர்வுகளையும், எண்ணங்களையும் வளர்த்துக் கொள்கிறது. தன் தேவைகள் சரியான முறையில் கவனிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ள குழந்தை, அற்புதமாக வளர்கிறது.
குழந்தைகளை உருவாக்கும் உண்மையான சிற்பி தாய்தான்.
எனவே, தாய் தன் உளிகளைக் கவனமாகப் பயன்படுத்தினால்,
பிறரால் மதிக்கப்படும் அழகான குழந்தைகள் உருவாக்கப்படுவர்.
- கிரேக்கப் பழமொழி.
பெற்றோரின் சமமான பங்களிப்பு:
நல்ல பெற்றோராக இருப்பது விதிவசத்தால் அமையும் ஒன்றல்ல... அதற்குப் பாடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பு அற்புதமான கலை. அப்பா, அம்மா இரண்டுபேரின் சமமான பங்களிப்பு இதற்குத் தேவை.
வழிகாட்டியாக, நண்பனாக, முன்மாதிரியாக, ஞானியாக, பராமரிப்பவராக, சொல்லித்தருபவராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். தங்களை முழுமையான மனிதர்கள் ஆக்கியது குழந்தை வளர்ப்பு என்பதைப் புரிந்து கொண்டவர்களும், குழந்தை வளர்ப்பை சந்தோஷமான அனுபவமாக உணரும் பெற்றோர்களும் கொடுத்து வைத்தவர்கள்.
குழந்தைகளின் லட்சியங்கள், எதிர்காலம் பற்றிய கனவுகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். அவர்களை நண்பரைப் போல் பார்த்துப் பேசும்போது, தங்கள் ஆதங்கங்கள், பிரச்சினைகளை உங்களிடம் கொட்டித் தீர்ப்பார்கள். மொட்டு விடுவது போன்ற பகிர்தல் இது. அவர்கள் தலை சாய்த்துக் கொள்ள ஒரு அனுபவத்தோள் தேவை. அது உங்களுடையதாய் இருக்கட்டும்.
ஒவ்வொரு விடியலிலும், பரிசீலனை செய்ய, கண்டுபிடிக்க, வெற்றிபெற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், உங்கள் குழந்தையை ஊக்கமும் உணர்வும் ஊட்டக் கூடிய மனிதர்களிடமும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுத்துங்கள். தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் அமைதியானவர்களாகவும், பிறரை நம்பும் குணமுடையவர்களாகவும் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தும் குணமுடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
குழந்தைக்கு என்ன வேண்டும்?
கலை, விளையாட்டு, சமூக உணர்வு எல்லாமே வாழ்க்கைப் பாடம்தான். பள்ளிப் பாடம் அளவுக்கு வாழ்க்கைப்பாடமும் அவசியம். வாழ்க்கையை ரசிப்பதும், சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுவதும் குழந்தைகளுக்குள் வளர வேண்டும். பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் மனமும், மனிதமும் குழந்தைகளில் அடிப்படை குணமாக வேர்பிடித்து வளர வேண்டும்.
வீட்டிலுள்ளோர் படிக்கும் பழக்கம் இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வரும். வாழ்க்கை முழுக்க ஒளிந்து கிடக்கிற ரகசியங்களை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கும், கேள்விகளால் நம் மனதில் நிறைய வெளிச்சங்களைக் கொண்டு வருவதற்கும் வாசிப்புப் பழக்கம் அவசியம். புத்தகங்கள் மட்டும் தான் நமக்குச் சிந்திக்கச் சொல்லித் தருபவை. எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனிதர்களை உருவாக்குபவை அவை.
குழந்தைகளிடம் இயற்கையாகவே கற்பனைத் திறன் ஒளிந்து கிடக்கிறது. அதை வளர்க்க வேண்டியது பெற்றோர் கடமை. குழந்தைகளின் கற்பனை வளம் பெருக உதவுவது புத்தகங்கள்; கதை சொல்லப்படுவதும், குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்கவே.
குழந்தைகளின் முக்கிய வேலையே விளையாட்டுதான். குழந்தைகளின் படைப்பாளுமையை, கூட்டுணர்வை, மனித நேயத்தை வளர்க்கும் விளையாட்டுகளே தேவையானது. உறவுகளை அடையாளம் காணும் வகையில் பருப்பு சமைத்து அனைத்து உறவுகளுக்கும் பகிர்ந்து மீதமானவற்றை பறவைகள் விலங்குகளுக்குப் பகிரச் சொல்லித் தருவதும், பகிர்தலில் மகிழ்வை உணர இறுதியில் நண்டுவருது, நரி வருது... என்று சொல்லியபடியே கிச்சுகிச்சு மூட்டி சிரிக்கச் செய்யும் உளவியல் தத்துவத்துடனான விளையாட்டை பாரம்பரியமாக நாம் குழந்தைகளிடம் விளையாடும் காரணம் புரியும் போது வியப்பேற்படுகிறதல்லவா...!
நன்றி: கடலூர் மாவட்ட இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம்
-சொல்ல இன்னுமிருக்கிறது...

தொடருங்கள். நன்று
ReplyDeleteநல்ல அழகிய ஆரோக்கியமான அதிர்ஷ்டவசமான பதிவு, அந்தப் புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போலவே.
ReplyDeleteநன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk
சிறந்த பதிவு. மேலும் எழுதுங்கள்.ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட உயிராக இருப்பதால் பெற்றோராய் இருப்பது குறித்த உரையாடல்கள் இன்னும் வேண்டும். நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறேன், இவர்களுக்கு வேறு என்ன வேண்டும்? - என்ற வாதத்திலிருந்து பெற்றோர்கள் வெளிவர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை... அதைப் பற்றி உங்களது பகிர்வு மிகவும் உபயோகமுள்ளது. தொடருங்கள்..
ReplyDeleteஉண்மையில் பாராட்டுகளுக்கு உரியது இப்படிபட்ட்ட சிறப்பான குழந்தைகள் தான் நல்ல எதிர்காலத்தை தர வியலும் உங்கள் கருத்துகள் பிபற்ற வேண்டியவைகள் .
ReplyDelete”உறவுகளை அடையாளம் காணும் வகையில் பருப்பு சமைத்து அனைத்து உறவுகளுக்கும் பகிர்ந்து மீதமானவற்றை பறவைகள் விலங்குகளுக்குப் பகிரச் சொல்லித் தருவதும், பகிர்தலில் மகிழ்வை உணர இறுதியில் நண்டுவருது, நரி வருது... என்று சொல்லியபடியே கிச்சுகிச்சு மூட்டி சிரிக்கச் செய்யும் உளவியல் தத்துவத்துடனான விளையாட்டை பாரம்பரியமாக நாம் குழந்தைகளிடம் விளையாடும் காரணம் புரியும் போது வியப்பேற்படுகிறதல்லவா...!”
ReplyDeleteஆம். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.
நல்ல பகிர்வு. தொடருங்கள்.
நல்லதொரு இளைய தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டியாய் நம் பங்கு என்ன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்களைத் தாங்களே சுய அலசலுக்காகத் தயார்படுத்திக்கொள்ளத் தூண்டும் பதிவு. குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கமே குறைந்துவிட்டது. தாத்தா பாட்டியெல்லாம் விருந்தினராகிவிட்டக் காலத்தில் இதுபோன்ற பதிவுகளே இயலாதவர்க்கு உதவும். நன்றி.
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.
ReplyDeletewww.blogintamil.blogspot.com