அலையோடும் விளையாடாது
அவளோடும் உறவாடாது
கட்டாது கிடக்கும் காலி மனைக்கான
தத்தம் கனவுக்கோட்டை பற்றி
சத்தமற்ற விவாதத்திலொரு பெற்றோர்...
செயலற்றிருக்கவொன்னாத
அவர்களின் குட்டிப் பெண்ணோ
அலைநனைத்த கரைமணலை
கால்கைகளின் துணைகொண்டு
குவித்தும் குழித்தும்
நிர்மாணித்தே விட்டாளொரு மாளிகையை!
எட்ட நின்று உற்றுக் கவனித்தன
இரு பொடிசுகள்...
அவர்களின் பெற்றோருக்கும்
அதி தீவிரப் பேச்சு
வேறெதற்கோ...
கட்ட நினைத்தவர்களும்
கட்டி முடித்தவளும்
எழுந்து
மணல் புதைத்த கால்களைப்
பெயர்த்துப் போயினர் இருப்பிடத்துக்கு.
வேடிக்கை பார்த்த பொடிசுகளுக்கு
ஓடிப் பிடித்து விளையாட்டு தொடங்கியது.
மணல் மாளிகைக்காரியின்
உழைப்புக்கும் ரசனைக்கும்
மரியாதை கொடுப்பது போல்
வளைந்தும் நெளிந்தும்
கவனமாயிருக்கிறதவர்கள் கொண்டாட்டம்.
அவர்களும் கிளம்பிய பின்
மாளிகைக்கு காவலாய்
வந்து வந்து போகின்றன
அலைகள்....
மணல் மாளிகைக்காரியின்
ReplyDeleteஉழைப்புக்கும் ரசனைக்கும்
மரியாதை கொடுப்பது போல்
வளைந்தும் நெளிந்தும்
கவனமாயிருக்கிறதவர்கள் கொண்டாட்டம்.
கோலத்தைத் தாண்டிப் போகும் கால்களும் இப்போது என் நினைவில்.
அருமையான சொற்சித்திரம்.
அருமை நிலா.
ReplyDeleteபெற்றோர்கள் எல்லாம் வீட்டிலும்
ReplyDeleteபிரச்சனகளிலும்தான் இருந்திருக்கிறார்கள்
குழந்தைகள்தான் கடற்கரைக்கும்
வந்திருக்கிறார்கள்
அந்த நொடியை ரசித்திருக்கிறார்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அற்புதமான கடல் காட்சி.
ReplyDeleteகரையில் கரையாது இருப்பவை குழந்தைகளின் கனவுகள் மட்டும்தான்.
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கடல் என்றும் வசீகரமாயிருக்கக் காரணம்
ReplyDeleteஅலைகள் மட்டுமல்ல; அலைகளில்
கால்கள் நனைக்கும் குழந்தைகள்ளாலும்
அவர்கள் கட்டும் மணல் வீடுகளாலும்தான்.
கட்டப்பட்ட மணல் மாளிகைகள் கால்களால் உதைக்கப்படாமலும், அலைகளால் அரிக்கப்படாமலும் இருப்பதே அதிசயம்தான்.கவிதை, அருமை....
ReplyDeleteஅவ்வளவு அழகு என்று மெச்ச தோன்றுகிறது அந்த குழந்தையின் உலககுத்தோடு இந்த கவிதையையும்
ReplyDelete