21 கருத்துரைகள்
  1. இத்தனை மெருகூட்டத்தான் இத்தனை நாள் தள்ளிப்போடலோ?

    காத்திருப்பு வீண்போகவில்லை.

    ஐந்து பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பயணம் இன்னும் முடிவதாயில்லை என் தண்டவாளங்களில்.

    ReplyDelete
  2. ஒரு புகைவண்டிப் பயணத்தை மேற்கொண்ட உணர்வு .
    //கற்பனைகள் கனவாக
    புன்னகையில் விரிகிறது
    அப்பேதை முகம்//
    ...அநேகமாய் எல்லோரும் எதிர்கொண்ட நினைவுகள். நல்ல கவிதை.

    ReplyDelete
  3. ஒவ்வொரு கவிதையும் எனக்குச் சொந்தமானது நிலாமகள். தினமும் இக்காட்சிகளையும் இன்னும் ஏராளமான சுவாரஸ்யங்களுடன் எனது ரயில்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நீண்டிருக்கிறது. இப்பயணங்களில் எப்போதும் குழந்தைகள்தான் சிறு பாவாடையுடன் வெட்கப்படும் பெண் குழந்தைகள்தான்...அதிகம் சுவையூட்டுகிறார்கள் வாழ்தலின் அர்த்தத்தை மனதில் அழுத்தமாக ஊன்றியபடி. அருமை நிலாமகள்.

    ReplyDelete
  4. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பயணத்துடன் இணைத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... :)

    ReplyDelete
  5. ஐந்து பெட்டிகள் கொண்ட புகை வண்டியில் நாமும் பயணித்ததைப் போன்ற அநுபவத்தைத் தந்தது கவிதை.

    பாராட்டுக்கள்!!


    //கொஞ்சம் கொஞ்சமாய்
    நகர்ந்து நகர்ந்து
    நெருக்கியடித்து
    அமரும்படியாய் சுருங்கியது
    எங்கள் இராஜியத்தின் எல்லை.
    படிக்கவும், எழுதவுமாய்
    அவரவர்க்கான உலகில்
    தன்னிச்சையாய் நடைபோட்ட//

    அவரவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இது பொருந்திப் போகுமோ தோழி?

    ReplyDelete
  6. ஐம்பதாய் பதிவிட்டதை ஐம்பத்தொன்றாய் மாற்றச் செய்தது மகனின் கருத்துக்கிணங்கி. என்ஜின் அறையில் நீங்களிருக்க எத்தனை கோர்க்கவும் தயாராய் நாங்களிருக்கிறோம் ஜி...

    ReplyDelete
  7. @ சைக்கிள் ...

    வாங்க வாங்க ... சிலாகிப்பில் மகிழ்கிறேன். நன்றி!

    ReplyDelete
  8. @ ஹரிணி...

    கொடுத்து வைத்தவர்களுக்கு தினம் தினம் வாய்க்கும் போலும் இத்தகைய சலிப்பற்ற சொகுசான பயணம்! எப்போதாவது கிடைக்கும் ரயில் பயணத்தை தவற விடுவதேயில்லை நாங்கள். எங்கள் குழந்தைகளின் சிறு பிராயத்தில் இரயிலில் போகும் அனுபவச் சுவைக்காகவே கிளம்பிய தருணங்கள் நினைவில் என்றும் பசுமையாய்... நன்றி ஐயா!

    ReplyDelete
  9. @ வினோ...

    மிக்க மகிழ்ச்சி வினோ!

    ReplyDelete
  10. @மணிமேகலா...

    தங்கள் பாராட்டுகள் என்னை ஊக்குவிக்கின்றன தோழி... நன்றி.

    தன் சுய அனுபவச் சாயல் தெறிக்கும் எந்த படைப்பிலும் வாசக மனம் திருப்தியடைகிறதோ...

    ReplyDelete
  11. நல்ல கவிதைகள். ரயில் பயணங்களில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் சுகானுபவம்தான்!

    ReplyDelete
  12. என்னைவிடப் பெரியவனாய்தான்
    இருக்கிறாய் நீ!'
    என்கிறது குட்டிப்பெண்...
    பாட்டிக்கு அணைவாயும்,
    அண்ணன்காரனுக்கு இதமாயும்!
    என்ன அழகாய் இதமாய் வரிகள்..
    பயணம் எத்தனை சுவாரசியமோ அத்தனை சுவாரசியமாய் கவிதைகளும்.. மனசுக்கு நிறைவாய்

    ReplyDelete
  13. அழகான காட்சிகளை காட்டுகின்றது உங்கள் கவிதை..நிலாமகள்.

    ReplyDelete
  14. ஒவ்வொரு பயணமும் விதவிதமான அனுபவங்களைத் தரும் என்பதை அழகான வரிகளில் வெளிபடுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  15. 'காணொலியற்ற பாடகன்'
    இந்த‌ வ‌ரியை நானும்,
    இரயிலேற்றி விடும்போது
    மாமன்காரன் திணித்த ரூபாயை
    சுருட்டி மடக்கி
    இறுக்கிப் பிடித்திருந்த
    சிறுமியொருத்தியாய்,
    தூக்க‌த்திலும் ந‌ழுவ‌விடாது பிடித்துக் கொள்கிறேன்.

    அரை ச‌த‌ம் தாண்டிய‌ ப‌திவுக்கு வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  16. கவிதை தட.... தட... வென்று ஓடுகிறது
    இன்னும் நின்ற பாடில்லை ... கடந்த பாடில்லை

    ReplyDelete
  17. வசப்பட்டிருக்கும் வார்த்தைகளில் விரவியிருக்கும் அனுபவ சிதறல்கள் மிளிரும் கவிதைகள்.

    ReplyDelete
  18. நிலாமகளே! இரயில் பயணக்கவிதை சலனப் படுத்திவிட்டது. அருமை. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வணக்கம் சகோதரி, இன்று தான் முதன் முதல் உங்கள் வலையகத்திற்கு வந்தேன், கவிதையினை- புகை வண்டிப் பயணத்தினைக் கமராக் கண் கொண்டு செதுக்கியுள்ளீர்கள்.

    ஒரு புதுவித மொழி நடையைக் கவிதையில் கையாண்டுள்ளீர்கள். பயணச் சுவை அனுபவங்களின் வெளிப்பாட்டை, அப்படியே மொழிகளாக்கித் தரும் வார்த்தைகளின் வரணஜாலம். keep it up.

    ReplyDelete