'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்...'
இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள்!
சில திருமணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன!
சில திருமணங்கள்
பெற்றோர்களால் நிச்சயிக்கப்படுகின்றன!
சில... உறவுகளால்!
பல... சந்தர்ப்பங்களால்!
இரு மனங்களால்
நிச்சயிக்கப்படுவதும் ஏராளம்!
நம் திருமணம்
எல்லாவற்றாலும் நிச்சயிக்கப் படுகிறது!
சிலதும் பலதும் எதுவாயிருப்பினும்
மனதும் மனதும் சேர்வதே வாழ்க்கை: சேர்ந்தோம்
வலது காலெடுத்து வைத்து வா!
என பாரதிக்குமார்(ச. செந்தில் குமார்) தன் வரவேற்புக் கம்பளத்தை கவிதைகளால் விரிக்க, 05.02.1993ம் தேதி உறவுகளும் நட்புகளும் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வாரியிறைக்க இனிதே நடந்தேறியது எங்களது திருமண நிச்சயதார்த்த விழா!
எங்களின் மனத் தோட்டத்தின் இரத்தினக் கூட்டில் குடியமர்த்தியிருக்கும் பரமக்குடிக் கவிக்குயிலொன்று ... இம்மாத ‘கிழக்கு வாசல் உதயம்' இதழில் எங்களுக்காகவே எழுதினாற்போலொரு கட்டுரையின் சில வரிகள் இதோ...
“மகிழ்வில் திளைக்கையில். சோகத்தில் ஆழ்கையில், தனிமையில் வீழ்கையில், தோல்வியில் துவள்கையில் சாய்ந்து கொள்ளத் தோளொன்று வேண்டும். அது அன்பின் பந்தத்தால் கிட்டிய தோளாக இருக்கும் பட்சத்தில், கடவுளே நம்மருகில் அமர்ந்தாற் போன்ற தெய்வீகமாகி விடுகிறது. வாழ்வின் வரங்களையும், நிம்மதியையும் பெற, துக்கத்தை மறக்க இந்தப் பகிர்வும், பகிர்வின் நிமித்தமான உரையாடல்களும், மனம் கோர்த்து வாழப் போகும் வாழ்க்கைக்கு அடித்தளமிடுகின்றன. உனதன்பு எனக்கு நங்கூரமா அல்லது பாய்மரமா என்ற அதிமுக்கியமான கேள்விக்குப் பதிலும் இவ்விடத்திலிருந்தே அறியப்படுகிறது.
அன்பை அறியும் இதயத்திற்குத் தான் அது எத்தனை உயர்வானது என்று புரியும். ‘எனதன்பின் குவிமையம் நீ' என உணர்த்துகிற நேசமிக்கவர்களிடமிருந்து எழும் பிரியமான செய்கைகளும், இனிய சொற்களும் எத்தனை மேன்மை மிக்கது! நமக்கெனத் துடிக்க பிறிதொரு உயிர் இருப்பதை உணரும் கணங்களில் நாம் எவ்வளவு பெரிய செல்வந்தனாகிவிடுகிறோம்!
எல்லா பண வேட்டைக்காரர்களும் அலைகிறார்கள்
தேசம் முழுக்க வலை வீசியபடி
கையில் சிக்கிய கடலை
கொல்லைப் புறத்தில் சேமிக்கிறார்கள்
புரண்டு ஓடும் ஆற்றை
அடுப்பங்கரையில் பதுக்குகிறார்கள்
தொங்கும் அருவியைச் சுருட்டி
தலையணையில் ஒளிக்கிறார்கள்
ஒரு குட்டையும் சொந்தமில்லாது
எப்பொழுது புன்முறுவலுடன் இருக்குமென்னை
ஒரு பிச்சைக் காரனைப் போல
வினோதமாகப் பார்க்கிறார்கள்
அவர்களுக்குத் தெரியாது
நம் தற்காலிகப் பிரிவின் போதும்
உன் விழி ஓரத்தில் கட்டி நிற்கும்
ஒரு சொட்டு நீரின் மதிப்பு.
(மிச்சமிருக்கும் ஈரம்... நெய்வேலி பாரதிக்குமார்)
இயல்பிலேயே மனிதர்கள் அன்பென்ற வரத்திற்காக நோன்பிருப்பவர்கள் தான்; அன்பின் எதிர்பார்ப்போடு சுவாசிப்பவர்கள் தான். அன்பிற்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் அன்பைத் தியாகம் செய்து விடக் கூடாது. அன்பு ஒன்றே பிறரை மதிக்கவும், விரும்பவும் வைக்கிறது. எந்த மதமும், எந்தக் கடவுளர்களும் அன்பைத் துறக்கச் சொல்லவில்லை. அறிவின் எல்லைகள் விரிந்து கொண்டிருப்பதைப் போலவே அன்பின் எல்லைகளும் விரிக்கப் பட வேண்டும். ஆழி சூழ் உலகில், அன்பு சூழ் வானிலையே நிலவிக் கொண்டிருக்கட்டும்!!”

பாரதிதான் என்னா ஸ்டைலு...
ReplyDeleteவாழ்த்துக்கள் சொந்தங்களே
தங்கள் வாழ்க்கையில் எப்பவும் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருக்கட்டும்
கைகளோடு கைகள் பந்தங்களோடு சேர்ந்திருக்க
நெஞ்சம் முழுவதும் சிறுகுழந்தையின் புன்னகை போன்ற சந்தோஷம் நிறைந்து
நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துகள்...
ப்ரிய சகோதரன்..
நிலாமகள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் குவிந்த அதே அன்போடு என்றும் இணைந்திருக்க என் மனம் நிறைந்த வாழ்த்து தோழி.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.. கடைசி பத்தியின் முதல் வரியில் இன்னும் அமர்ந்திருக்கிறது மனசு..
ReplyDeleteவாழ்த்துக்கள்...[:-o]
ReplyDelete[im]http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/35.gif[/im]
ReplyDeleteநேற்றின் வர்ணங்களும் நாளையின் சுகந்தங்களும் நிரம்பிய மலர்கள் உங்கள் இருவரின் கையெட்டும் தொலைவிலேயே மலரட்டும் நிலாமகள்-பாரதிக்குமார்.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉண்மைதாங்க. அன்பை விலையாய் கொடுத்து எதை வாங்கினாலும் அதற்கு மதிப்பில்லை.
ReplyDeleteஎப்போதும் சந்தோஷமாக நீங்கள் இருக்கவேண்டும் என்று நான் மனமார பிராத்திக்கிறேன்
ReplyDelete-உங்கள் அன்பு மகன்.
பூங்கொட்துடன் வாழ்த்துகள்!
ReplyDeleteசாரி பூங்கொத்துடன்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எல்லா வளங்களும் தொடர்ந்து கிட்ட எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநட்புடன்
வெங்கட்
உங்கள் இருவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பே ஷிவம்!
ReplyDeleteவாழ்வில் கடவுளைக் கண்டு கொண்டீர்கள் தோழி!!
வாழ்க நீங்கள் பல்லாண்டு!!!
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிறைந்தோடும் நதிபோல வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிறைந்தோடட்டும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நிலாபாரதி.
ReplyDeleteநிலத்தில் தனித்திருக்கும் பசுங்கொடிகளைவிட, மரத்திலேறிய கொடிகளின் இலைகள் பரந்து விரிந்திருப்பதைக் கண்டிருப்பீரகள். மரத்திற்கு கொடியழகு, கொடிக்கு மரத்தால் உயர்வு. வாழ்க நூறாண்டு.
ReplyDeleteஉங்கள் இருவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லா நலனும்,வளமும் பெற்று நீவீர் இருவரும் வாழ்க பல்லாண்டு!
ReplyDelete@வசந்த்...
ReplyDelete'பாரதிதான் என்னா ஸ்டைலு !'
அது பெயருக்கேயுரிய தனி ஸ்டைலு!
மச்சானா லட்சணமா எங்களை முன்னின்று கைபிடித்து அழைத்துச் செல்ல வந்த வசந்த்துக்கு மனசில் என்றும் தனியிடம் தான் உச்சாணியில்!
சிறு குழந்தையின் புன்னகையாய் நிறைவான மகிழ்வு எங்களுக்கு....! நன்றி சகோ...
@ஹேமா...
ReplyDeleteமனம் குவிந்த வாழ்த்துக்கு நெகிழ்வான மகிழ்வு ததும்பும் நன்றி தோழி...
வினோ said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.. கடைசி பத்தியின் முதல் வரியில் இன்னும் அமர்ந்திருக்கிறது மனசு..
மிக்க நன்றி வினோ... வருகைக்கும் வாழ்த்துக்கும்!
கடைசி பத்தியின் வரிகளுக்கான பாராட்டை, வரிகளை வார்த்த எனதன்பு பரமக்குடித் தோழிக்கு சமர்ப்பிக்கிறேன்.
எங்கே உங்க தோழர் கமலேஷ்... வலையுலகில் காண முடியலே... எனதன்பை தெரிவிக்கவும்.
Philosophy Prabhakaran said...
ReplyDelete[im]http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/35.gif[/im]
வாங்க பிரபா...
ஸ்மைலி சந்தோஷப் படுத்தியது. மிக்க நன்றி.
@சுந்தர்ஜி...
ReplyDeleteஎங்கள் கையெட்டும் தொலைவிலேயே நீங்கள் எல்லாமிருப்பதும் மணம் கமழ் மகிழ்வே!! நிறைவான வாழ்த்துக்கு நன்றி ஜி!
@ரிஷபன்...
ReplyDeleteபதிவைக் கண்டதும் தம்பதியராய் தொலைபேசி வழி ஆசிர்வதித்ததில் நெகிழ்ந்து போனேன். இப்படியான உறவுகளை எமக்களித்த இறையருளுக்கு தலைவணங்குகிறேன்.
Nagasubramanian said...
ReplyDeleteஉண்மைதாங்க. அன்பை விலையாய் கொடுத்து எதை வாங்கினாலும் அதற்கு மதிப்பில்லை//
வாழ்தலின் ஆணிவேரை உணர்ந்திருக்கிறீர்கள் நாகா... மிக்க நன்றி!
Sibhi Kumar said...
ReplyDeleteஎப்போதும் சந்தோஷமாக நீங்கள் இருக்கவேண்டும் என்று நான் மனமார பிராத்திக்கிறேன்
-உங்கள் அன்பு மகன்.
எங்கள் சந்தோஷக் கிடங்கின் சாவி உன்னிடமுமிருக்கிறது மகனே... உனது ஆசிப் பூ எங்களுக்கு உவப்பு!
@அருணா ...
ReplyDeleteபூங் கொத்துடனான முதல் வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது தோழி... இப் பதிவு எனக்கொரு இனிய நட்பையும் நல்கியிருக்கிறது! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
@வெங்கட் & கோவை 2 டெல்லி ....
ReplyDeleteதம்பதியரின் கனிவான வாழ்த்து எப்போதும் போல் பரவசப்படுத்துகிறது... நன்றி வெங்கட்... நன்றி ஆதி...
@வேல் கண்ணன்...
ReplyDeleteவாங்க வேல் கண்ணன்... வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்வும் நன்றியும்!
@மணிமேகலா...
'அன்பே சிவம்' !
அனைவருக்குமான தத்துவம்! மகிழ்கிறேன் தங்கள் நிறைவான வாழ்த்துகளால்! நன்றி தோழி...
@சந்தானக் கிருஷ்ணன்...
பெரியோரின் ஆசிகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்! வைத்திருக்கிறோம் !! மிக்க நன்றி ஐயா ...
@ஹரிணி...
ReplyDeleteபெயரிலும் இணையாக்கிய தங்களின் அன்பு நிறை வாழ்த்தில் பூரிக்கிறோம் ஐயா... ஓடிக் கொண்டிருக்கும் இச் சிறு நதி உங்கள் பாதங்களையும் நனைத்துச் செல்வதில் பெருமகிழ்வு!
vasan said...
ReplyDeleteநிலத்தில் தனித்திருக்கும் பசுங்கொடிகளைவிட, மரத்திலேறிய கொடிகளின் இலைகள் பரந்து விரிந்திருப்பதைக் கண்டிருப்பீரகள். மரத்திற்கு கொடியழகு, கொடிக்கு மரத்தால் உயர்வு. வாழ்க நூறாண்டு.
வேருக்கு நீரூற்றியமைக்கு மகிழ்வு! வசீகரிக்கிறது தங்களின் வளமான மொழியும் திறனும்! வசப்படுகிறேன் எப்போதும் போல.
@விக்கி உலகம் ...
ReplyDeleteவாங்க வெங்கட் குமார் !வாழ்த்துடனான முதல் வருகைக்கு நன்றி. இன்னொரு வெங்கட்! இருக்கட்டுமே... இன்னொரு சகோதரன் !
@ஆர் ஆர். .ஆர்....
ReplyDeleteவாங்க சார் ... உற்சாகமடைகிறேன் தங்கள் வாழ்த்துகளால்... மிக்க நன்றி!
நலமா தோழி....
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்... இருவருக்கும்..
சரி, நிச்சயம் முடிந்து எத்தனை நாள் கழித்து திருமணம்? சொல்லி விடுங்களேன், முதல் ஆளாக திருமண நாள் வாழ்த்துச் சொல்லத்தான்....
@கிருஷ்ணப்ரியா ...
ReplyDeleteவாங்க ப்ரியா... அன்பு சூழ் நட்புகளால் நலமே என்றும்! திருமணமா... நதியடியில் புரளும் கூழாங்கல்லாய் உருண்டோடிய நாற்பதாம் நாள்! அன்பின் அகத்திணை!