நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நீத்தார் நினைவு

Tuesday, 13 July 2010

கைத்தடி சின்ன மகனுக்கு
மூத்த பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடி
காவியேறி நைந்த வேட்டி ரெண்டும் கேட்பாரற்று
மேல் துண்டு சுருணையானது அடுக்களையில்
போகவர போடும் டெரிலின் சட்டை ரெண்டும்
பெரிய மனசோடு சின்ன தாத்தாவுக்கு
இவ்வளவும் அடக்கி இத்தனை காலமும்
கைத்தடியில் மாட்டிவந்த மஞ்சள் பை
காதறுந்து குப்பைத் தொட்டியில்
வருடங்கள் தேய்த்துக் கடந்த செருப்பும்
தொலைந்தது ஈமச் சடங்கன்று
ஆயிற்று-
தாத்தா செத்துப் பத்தே நாட்கள்!

5 கருத்துரைகள்:

 1. நினைவுகள் மட்டும் அவரவர் எச்சத்துக்கேற்ப இன்னும் கூடுதலாய் சில நாட்கள்.அருமையான கவிதை நிலாமகள்.

 1. உங்க கணிப்புக்கு உடன்படுகிறேன் ஜி! அவ்வளவு குறைந்தபட்ச ஆஸ்தியுடன் வாழ்ந்து முடிந்த தாத்தாக்கள் காலமெல்லாம் மலையேறிப் போச்சே!

 1. தூக்கிப் போடுகிறது கவிதை படித்ததும்!

 1. முதுமையை அலட்சியப் படுத்தி ஒதுக்கிப் பின் அடியோடு மறக்கும் போக்கு, பரவலாவதைக் காணும் போது பதைக்கிறது மனசு.

 1. இதனைப் பார்த்ததும் பா.ரா. எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.மனதில் அது இவ்வாறு பதிவாகியிருக்கிறது.

  பக் பக் என்றழைத்தால்
  தானியம் தரவென அறிகிறது கோழி.

  உதடு குவித்து பூஸ் என்றால்
  புரியும் றோசிப் பூனைக்கு.

  ச்சு ச்சு ச்சு என
  மேலண்ணத்தில் தட்டினால்
  வாலாட்டி ஓடி வரும் ஜிம்மி.

  'ந்தா'என்றதும் தட்டெடுப்பார்
  திரவியம் என்றழைக்கப் பட்ட தாத்தா!!


  தாத்தாமார் இப்போது மனதில் வாழ்கிறார்கள்!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar