நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

அற்புதம் அம்மா!!

Wednesday, 19 February 2014

உயிர்ச் சிறைக் கூடமாய்
மனித உடம்பிருக்க
கருவறை வெளிபோந்தும்
மற்றுமொரு சிறைவாசம்
சந்தர்ப்ப சூழலால்...

வெகு தாமதமாகவேனும்
கட்டறுத்தது காலக் கத்திரி
வயிறு குளிர மனம் நெகிழ
மறுபிரசவித்தாய் உன் மகனை.

வாழிய!

16 கருத்துரைகள்:

 1. வணக்கம்
  உண்மைதான் அவர்கள் மூவரும் மறு பிறவிதான்....வாிகள் சிறப்பு வாழ்த்துக்கள்

 1. மிகுந்த சந்தோசம்...

 1. அருமையான சமர்ப்பணம்!

 1. உச்சக் கட்ட மகிழ்ச்சியில் எமது உள்ளமும் தலை வணங்குகின்றது இச் செயலைக் கண்டு !!

 1. தாய்மைக்கு வந்தணம்! தாய்மையின் வலியைப் பிரசவித்த கவி வரிகளுக்குப் பாராட்டுகள்.

 1. ADHI VENKAT said...:

  அருமையான வரிகள்.

 1. அற்புதமான அம்மா.
  இவர் நிகழ்த்தப் போகும் அற்புதங்கள் உணர்ந்து தான்
  இப்படி ஒரு பெயர் வைத்தனரோ இவர் பெற்றோர்..!

  அயராத முயற்சிக்கும், தளராத நம்பிக்கைக்கும்
  அழகான உதாரணம் அற்புதம் அம்மா,,,,

 1. //வெகு தாமதமாகவேனும்
  கட்டறுத்தது காலக் கத்திரி
  வயிறு குளிர மனம் நெகிழ
  மறுபிரசவித்தாய் உன் மகனை.//
  உணர்வுப்பூர்வமான வரிகள் நிலாமகள். அற்புதம் அம்மா ஒரு வாழும் அற்புதமே தான்.

 1. யாருடைய விடுத்லை? எதற்காகச் சிறைவாசம்?

 1. @அப்பாதுரை

  மிக சூட்சுமமான கேள்விகள்... பாவம் ஓரிடம்; பழி வேறிடம் என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறதே...

 1. இப்படி வார்ரீங்களே நியாயமா? உனண்மையிலயே விவரம் தெரியாமல் கேட்ட கேள்விங்க.
  :)

 1. நல்ல கவிதை.....

  இன்னமும் பிரச்சனை முடியவில்லை என்று தான் தோன்றுகிறது.

 1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

  வலைச்சர தள இணைப்பு : வலை வீசம்மா வலை வீசு

 1. @வெங்கட் நாகராஜ்
  சாமானியர்களின் பிரச்சினை என்று தான் முடியும்?! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டும் நாள் வரட்டும் சகோ.

 1. @அப்பாதுரை
  உண்மையாவா?! உலக அளவு விரிந்த கதையாச்சே ... சொல்லி மாளாது எளியேனால்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar