நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

செவிப்'பறை'

Friday, 14 February 2014

இணையுடனான
காதல் கனிமொழியா?

துணையற்ற முதுமையின்
ஏக்கப் புலம்பலா?

பகிர்ந்து மாளாத
நட்பின் குதூகலமா?

பேசி முடியாத
பங்காளிச் சண்டையா?

பிரம்ம முகூர்த்தத்திலொரு
இலக்கியப் பேருரையா?

பேராசிரியராயிருந்த
முன் ஜென்மப் பழம்நினைவா?

 அரசியல் கூட்டணி பற்றியா அல்லது
சமூக அவலங்கள் பற்றியா?

விலைவாசி பற்றியா அல்லது
வருமானத்துக்குப் புதுவழி பற்றியா?

கூட்டிலிருக்கும் சிறகு முளைக்காத தன்
அடித் தோன்றல்களுக்கு
புறப்படுமுன் புத்திமதியா?

குரல் வழி பிரத்யட்சமாகும்
கிளிகளின் தொடர் பேச்சு
இக்காலை வேளையில் 
எதைப்பற்றியதாய் இருக்கும்?!

9 கருத்துரைகள்:

 1. Rupan com said...:

  வணக்கம்

  சிறப்பாக உள்ளது....
  வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 1. குரல் வழி பிரத்யட்சமாகும்
  கிளிகளின் தொடர் பேச்சு
  இக்காலை வேளையில்
  எதைப்பற்றியதாய் இருக்கும்?!


  ரசிக்கவைத்தது..!

 1. முடிவிலும் ரசனை அருமை... வாழ்த்துக்கள்...

 1. போன வார புது சினிமா பற்றி இருக்குமோ?

 1. அழகான கவிதை நிலா..
  உங்கள் நளினமான வார்த்தைகளின்
  கவனமான கோர்ப்பில்
  மனதை மயக்குகிறது கவிதை....

 1. Ramani S said...:

  அருமையான அற்புதமான கற்பனை
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

 1. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  அன்பு வாழ்த்துகள்.

  மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

 1. சிறப்பான கவிதை.

  அவற்றுக்கும் பேச எத்தனையோ விஷயங்கள் இருக்குமோ..... நம்மைப் போல!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar