நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நமக்கும் கிடைக்கும்

Friday, 30 August 2013
திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி - 4


     
         1330 குறட்பாக்களும் 71 எழுத்துக்களில் தொடங்குகின்றன; 47 எழுத்துக்களில் முடிகின்றன என கடந்த பதிவில் பார்த்தோம்.

       இதிலும் நுட்பமாக ஆராய்ந்தால், க, கு, கை, சி, சு, தி, தீ, து, பு, ம, வா, வி, வை ஆகிய 13 எழுத்துக்களில் மட்டுமே தொடங்கும் குறட்பாக்களும் முடியும் குறட்பாக்களும் காணக் கிடைக்கிறது.

       அதே போல், ஞா(484), பீ(475), போ(693), மை(838), மோ(90) இவ்வெழுத்தில் தொடங்கும் குறட்பா ஒவ்வொன்று மட்டுமே உள்ளது. அடைப்புக் குறிக்குள் உள்ளது குறளின் வரிசையெண்.

        முதலெழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றாய் அமைந்த குறட்பாக்கள் 6 உள்ளது. நான்கு பொருட்பாலிலும்(391, 544, 604, 1025), இரண்டு காமத்துப் பாலிலும் (1187, 1218)இடம் பெற்றுள்ளன.

கடைசிச் சீர்:
1330 குறட்பாக்களும் 327 சீர்களில் முடிகின்றன.
உலகு, எனின், வார், மாட்டு, அற்று, விடும், பிற, துணை, இல், உடைத்து, படும், கடை, பெறின், வரும், தவர், இனிது, தரும், சிறப்பு, அன்று, இன்று, பயன், உண்டு, நட்பு, கெடும், விடல், செயின், அறிந்து, கண், பவர், அவர், செருக்கு, அகத்து, எனல், உள, இடத்து, பவர்க்கு, நகும், பலர், சுடும், மிகும் ஆகிய 40 சீர்கள் கடைசிச் சீர்களாக முப்பாலிலும் இடம் பெற்றுள்ளன.

        ஏறு, அரசு, ஒளி, தக, செவி, அரண், இறைக்கு, நூல், நிலை, கயிறு, களிறு, தெளிவு, சோர்வு, நன்கு, வெளிறு, முறை, குடி, கோல், தொக்கு, நேர், வேந்து, பெயல், அரம், ஒற்று, மறை, மற்று, உழை, மேல், அமைச்சு, கடன், பணிந்து, பண்பு, தூது, முகம், செறிவு, இழுக்கு, நாடு, உறுப்பு, ஐந்து, சென்று, படைக்கு, எஃகு, எடுத்து, காப்பு, கொளின், துப்பு, பகைக்கு, செறின், தனக்கு, நணித்து, எளிது, சுளி, சூது, பசித்து, உயர்ந்து, பணிவு, வியந்து, தூண், சால்பு, வழக்கு, ஒப்பு, இருள், பிறர், நிரப்பு, கீழ், கலன், இலர் ஆகிய 67 சீர்கள் கடைசிச் சீர்களாக பொருட்பாலில் மட்டும் இடம் பெற்றுள்ளன.

        கட்டு, துகில், பீடு, தந்து, நீர், குறிப்பு, பறை, மீன், மதி, பழம், இடம், குணம், ஊர், வலி, மடல், புணை, துயர், மருண்டு, இழந்து, புணர்வு, தவறு, வளை, பிரிவு, தீ, உளேன், இலேன், இரா, பசப்பு, கணி, அளி, வரல், நினைந்து, நொந்து, உரைத்து, நுதல், கண்டு, விரல், மார்பு, உப்பு, கதவு ஆகிய 40 சீர்கள் கடைசிச் சீர்களாக காமத்துப் பாலில் மட்டும் இடம் பெற்றுள்ளன.

        ‘இல்' ஈற்றுச் சீராக 44 இடங்களில் வருகிறது.
‘படும்' 42 இடங்களிலும்,
‘தரும்' 37 இடங்களிலும்,
‘கெடும்' 38 இடங்களிலும்,
‘உலகு' 25 இடங்களிலும்,
‘செயல்' 22 இடங்களிலும்,
‘தலை' 21 இடங்களிலும்,
‘கொளல்' 20 இடங்களிலும் ஈற்றுச் சீராக வந்துள்ளன.

நூலாசிரியர் அ.ஆறுமுகம் அவர்களின் குறிப்புப்படி, அவரது இளமைப் பருவத்தில் திருக்குறள் பயிலும் ஆர்வம் இருப்பினும், தனது ஆசிரியர் பணிக்காலத்தில் திருக்குறள் பதின்கவனகர்- நினைவுக்கலையேந்தல் பெ.இராமையா அவர்களது தொடர்பும், பல நிகழ்ச்சிகளுக்கு அவருடன் செல்லும் வாய்ப்புமே பெரும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. புறக்கண்ணை இழந்த திரு. இராமையா அவர்கள் இத்தகைய ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருகண்களும் உள்ள நாம் இதனைப் பெற முடியாதா என்ற எண்ணமே உறுதிக்கான அடிப்படையாகி இருக்கிறது. திரு. அ.ஆறுமுகம் தனது 40 வயதில் ஐந்து மாதங்களுக்குள் திருக்குறள் முழுமையும் நினைவில் நிறுத்த் வெற்றிபெற்ற பட்டறிவே இந்நூலெழுதத் துணைநின்றிருக்கிறது.

        “எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்” (666)
நூற் பெயர்: திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி
ஆசிரியர்:   அ. ஆறுமுகம்,

வெளியீடு: 
பாவேந்தர் பதிப்பகம், ‘சீரகம்', திருமழபாடி, திருச்சி-621 851.

கொசுறு:

2 கருத்துரைகள்:

  1. திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி, பற்றி பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  1. வியப்பளிக்கும் தகவல்கள். நினைவாற்றலுக்கு வழிகாட்டியே தான். பகிர்வுக்கு நன்றிகள் + பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar