குழந்தைகள் பெற்றுக்கொள்வது வெகு சுலபம் தான். நல்வழியில் வளர்த்தெடுப்பது தான் ...
நாம் வாங்கிக் குவிக்கும் பொருட்களால் அல்ல... நாம் காட்டும் அன்பினால் தான் குழந்தைகள் சிறந்தவர்களாகிறார்கள்! சதாசர்வ காலமும் குழந்தைகள் மேல் நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை அதிக தடவை இச்சாதனையை நாம் செய்கிறோம் என்பதில் இருக்கிறது நம் குழந்தைகளின் அதீத வளர்ச்சி.
பிரகாசமான குழந்தைகளுக்கு பெற்றோரே நிரந்த ஆசிரியர். கற்றுக் கொள்ள உதவும் வசதிகள், உதவிகள், விமர்சனங்களை செய்யுங்கள். அறிவிற்கும், திறமைகளுக்குமான பயிற்சிக்கும், ஆரோக்கியமான விமர்சனத்திற்கும் குழந்தைக்கு உதவி தேவைப்படும். சிறிய விண்ணப்பங்களையும் மதிக்கவும் பெரிய விஷயங்களை விவாதிக்கவும் வேண்டும். ஒரு விண்ணப்பம் மறுக்கப்பட்டாலும் அவன் நேசிக்கப் படுவதை அவன் அறிய வேண்டும். தன்மதிப்பை ஏற்படுத்தி நல்ல பழக்கங்களை உண்டாக்க வேண்டும்.
வெற்றி பெறுவதற்காக நமது நாணயத்தை இழப்பதும்,குறுக்குவழிகளைத் தேர்ந்தெடுப்பதும் பயனுள்ளதல்ல. நாம் நமது நற்பண்புகளுக்கு விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது நம் பொறுப்பே.
“சிந்திக்கவும், ஆச்சர்யப்படவும், கனவு காணவும் அவர்களுக்குக் கற்றுத் தாருங்கள். வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளவும் கற்பியுங்கள். புகழ்ச்சியையும் முகஸ்துதியையும் வேறுபடுத்திக் காணவும் கற்பியுங்கள். சூரிய அஸ்தமனத்தின் சந்தோஷத்தை, பகிர்வதன் சந்தோஷத்தைக் கற்பியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நிமிர்ந்து நடக்கக் கற்பியுங்கள்.”
- கலீல் கிப்ரான்.
இதற்குத் தான் நம் குழந்தைகளிடம் சுய மதிப்பை உண்டாக்க
வேண்டியிருக்கிறது.
கடினமான பருவ வயதில் கைப்பிடித்து நடத்தி, பெரியவர்களானதும் அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம் குழந்தைகள் எப்படி வாழ்வார்கள் என்பதை பெரிதாக முடிவு செய்கிறது.
ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதத்தின் சுருக்கம் ஒன்று படிக்கக் கிடைத்தது... உங்கள் பார்வைக்கு இதோ...
“எல்லா மனிதர்களும் நேர்மையானவர்களல்ல; உண்மையானவர்களல்ல என்று அவன் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு போக்கிரிக்கும் ஒரு கதாநாயகன் உண்டு. ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதிக்கும் தியாகியான தலைவன் உண்டு. ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் உண்டு என்றும் அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
முடியுமானால் பொறாமையை விட்டு அவனை விலக்குங்கள். அமைதியாக இருப்பதன் இரகசியத்தைக் கற்றுத் தாருங்கள். கொடுமை செய்பவன் விரைவில் காலில் விழுவான் என்று அவன் கற்றுக் கொள்ளட்டும்.
ஏமாற்றுவதை விடத் தோற்பது எவ்வளவோ பெருமையானது என்று அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
நளினமானவர்களோடு நளினமாகவும் கடினமானவர்களோடு கடினமாகவும் பழக அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்று அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும் அதிக இனிமையாகப் பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுத் தாருங்கள்.
தன் தசையையும் மூளையையும் அதிக விலைக்கு விற்கவும், ஆனால் தன் இதயத்திற்கும் ஆன்மாவிற்கும் விலையை நிர்ணயிக்காதிருக்கவும் கற்றுத் தாருங்கள்.
கூக்குரலிடும் கூட்டத்துக்கு செவிசாய்க்காதிருக்கவும், தான் சரியென்றால் எதிர்த்துச் சண்டையிடவும் கற்றுத் தாருங்கள். மென்மையாகக் கற்றுத் தாருங்கள். ஆனால் கெஞ்ச வேண்டாம். ஏனெனில் தீயில் சோதித்தால்தான் இரும்பு சுடர்விடும்.
பொறுமையின்றி இருக்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கட்டும். துணிவோடிருக்கும் பொறுமை இருக்கட்டும்.
தன்னிடம் உன்னத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். ஏனெனில் அப்போதுதான் மனித இனத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.
இது பெரிய விண்ணப்பம் தான். ஆனால் உங்களால் என்ன செய்ய முடியுமென்று பாருங்கள்.
என் மகன் அவ்வளவு உன்னதமானவன்.”
-----------------
இப்படி எந்த விண்ணப்பமும் தர நாமும்...
உத்திரவாதம் தர
இன்றைய அரசின் கல்விக் கொள்கையும்,
கல்வி நிறுவனங்களும்,
ஆசிரியப் பெருந்தகைகளும்
தயாரில்லை....
பணம், புகழ், சமூகத்தில் உயரிய இடம்... இதை மனதில் வைத்தே பெரும்பாலோர் ஓட்டம்.
அரைக் கிணறு (பத்தாம் வகுப்பு) முக்கால் கிணறு (பனிரெண்டாம் வகுப்பு) தாண்ட வேண்டி நம் குழந்தைகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டுள்ளனர்.
நம் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்கு சமர்ப்பிப்போம்!
அருமையான பகிர்வு சகோ.....
ReplyDeleteலிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் - படிப்பதில் சற்றே சிரமம் - அதில் இருக்கும் வண்ணத்தினால்!
ஜிப்ரான் - நாளை எனது பக்கத்திலும் ஜிப்ரான் பற்றிய பகிர்வு தான்! :)
முதல் பள்ளிக்கூடம் வீடு தான்...
ReplyDeleteநல்லதொரு கருத்துக்கள் அடங்கிய பகிர்வு...
நாம் நமது நற்பண்புகளுக்கு விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது நம் பொறுப்பே.
ReplyDeleteநம் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்கு சமர்ப்பிப்போம்!
சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
தோழியாரே,
ReplyDeleteநலமா?
இனிமையான இடுகை. ஆழமான கருத்துகள். அனைத்து பெற்றோரும் தன் குழந்தையின் வளர்ச்சி, உயர்ச்சி காணவே விழைகின்றனர், இருப்பினும் அவர்களது அறியாமை... இயலாமை... என்ன செய்வது. கட்டாயம் ஒரு ஒரு பெற்றோரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தியை பதிவு செய்துள்ளீர். பாராட்டுக்கள். நிறைய பெற்றோர்கள் இதை படிக்கவேண்டும் என்று ஆசையுடன் வாழ்த்துகிறேன். (உங்கள் மகன் பாக்கியசாலி).
- கண்ணன், தஞ்சையிலிருந்து.
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeleteதன்னிடம் உன்னத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். ஏனெனில் அப்போதுதான் மனித இனத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.
ReplyDeleteஆழமான கருத்துகள்.
அருமையான கருத்துகள்.
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteYou are not a responsible child
if i have to solve your problems, and
I am not a responsible parent
if you cannot solve your problems.
மிகத் தேவையானதொரு பகிர்வு.
ReplyDeleteநன்றி.
லிங்கன் மகனின் ஆசிரியர் கொஞ்சம் நடுங்கி இருப்பார் அல்லவா?
Super Appaji
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்...
ReplyDeleteஅன்பான வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துக்கும் நன்றி சகோ...
@ திண்டுக்கல் தனபாலன்...
தொடர் வருகையும் தெளிந்த சிந்தனையும் மகிழ்வு தருகிறது சார்.
@ இராஜராஜேஸ்வரி ...
ஆன்மீகக் கடலின் ஆசிகள் என்றும் எங்களுக்காக.
@ கண்ணன்...
நலமே. விரைவில் உங்களுக்காக ஆத்திச்சூடி அலசல்...
எங்க வீட்டு பாக்கிய சாலிக்கு இன்றுதான் தேர்வு தொடக்கம் தோழர்.தங்கள் மனம்திறந்த பேச்சு நிறைவளிக்கிறது.
@ வை.கோ. சார்...
எல்லாம் தங்கள் ஆசீர்வாதம்! வருகைக்கும் உற்சாகப்படுத்தல்களுக்கும் நன்றி ஐயா.
@ ரிஷபன்...
கடிதத்தின் அடிநாதத்தை கைப்பிடித்து விட்டீர்கள் சார். தங்கள் அனைவரின் ஆசி வேண்டியே இப்பதிவு.
@ கோவை 2 தில்லி...
தொடர் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
@ அப்பாதுரை சார்...
இச்சிறியேனை கெளரவிக்கும் வருகையும் கருத்தும். பதிவின் சாராம்சத்தை வேறொரு கோணத்தில் சுருங்கச் சொன்ன விதம் அழகு.
@ சிவகுமாரன்....
வருகையும் கருத்தும் மகிழ்விக்கிறது சிவா. அப்பாஜிக்கான பாராட்டை நானும் வழிமொழிகிறேன்.
@சிவகுமாரன்...
ReplyDeleteநீங்க சொன்ன பிறகு தான் அவரைப் பற்றியும் நினைக்கிறேன் சகோ... சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கோணம்.