இரயிலுக்கு காத்திருந்த
பயணிகள் கூட்டத்தில்
ஓரிடத்தில் நிற்கவொண்ணா பொடிசுகள்
ஓரணியாய் திரண்டு
ஒருவர்பின் ஒருவராக
சட்டை பிடித்து பெட்டி கோர்க்க
ஓடத் தொடங்கிற்று
அங்கொரு கும்மாள இரயில்...
மூட்டை முடிச்சுகளை
கும்பல் மனிதர்களை
மனச்சுமை மறக்க
குட்டித் தூக்கம் போடுபவர்களை
நிறுத்தங்களாக்கி
உற்சாகக் கூவலுடன்
வளைந்து நெளிந்து
ஓடிய அவர்களுடன்
கட்டணமின்றி பின்னோக்கிப் பயணித்தன
வேடிக்கை பார்த்தவர்களின்
'இனி ஒருபோதும் திரும்பாத'
வசந்தப் பொழுதுகளும்.
வந்து நின்ற நிஜ இரயிலில்
அடித்து பிடித்து
அனிச்சையாய் ஏறின
வெற்றுடம்புகள்.
கடந்த காலத்தில் மேய்ந்து கொண்டிருந்த
மனசெல்லாம்
கிளம்பிய வண்டியில் தாவி ஏறி
தத்தம் உடல் புகுந்தன.
இழுத்து விட்ட பெருமூச்சோடு
வேகமெடுத்தது இரயில்.
யதார்த்தமான வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிமையான ரயில் பெட்டிகள் போன்ற நினைவலைகளை, இன்றைய யதார்த்தமான எஞ்சினுடன் கோர்த்து, கவிதையாக ஓடவிட்டுள்ளது அருமையோ அருமை..பாராட்டுக்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஏக்கம் என்ற கட்டணம் கட்டாயம் தேவைப் படுகிறது பின்னோக்கி பயணிக்க
ReplyDeleteவெற்றுடம்புகள்.
ReplyDeleteகடந்த காலத்தில் மேய்ந்து கொண்டிருந்த
மனசெல்லாம்//
ஆஹா என்ன சொலவது?
அருமை....
ReplyDeleteஅப்படியொரு அழகிய ரயில் பயணம் எனக்கு இன்னும் அமையவில்லை ..
ReplyDeleteஅருமையான வரிகள்...
ReplyDelete//இழுத்து விட்ட பெருமூச்சோடு
ReplyDeleteவேகமெடுத்தது இரயில்.//
ஆஹா! பிரமாதம்!
கும்மாள இரயில்...ரசிக்கவைத்தது ...
ReplyDeleteமனதைப் பிசையும் வரிகள்.
ReplyDeleteநிஜ இரயில் கொஞ்சம் திடுக்கிட வைத்தது.
This comment has been removed by the author.
ReplyDeleteதோழியாரே,
ReplyDeleteவார்த்தைகளின் கோர்வுகள் இரயில்பெட்டியின் கோர்வுகளைக்காட்டிலும் பொருத்தமாக இருக்கின்றது. நல்ல வளமையான வார்த்தைஜாலம்.மிகவும் அருமை. மனசு விட்டுச்சென்ற உடம்பை வெற்றுடம்பு என்று குறிப்பிட்டு இருப்பது அருமை. நான் முதலில் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பின் புரிந்தது, இனித்தது.
பி.கு.: கவிதை எழுதும் அனைவருமே ஏன் கடந்தகாலத்தை இனிமையானதாகவும், நிகழ்காலத்தை வெறுமையாகவும் சித்தரிக்கிறீர்கள் என்று எனக்குப்புரியவில்லை. :-(
-- கண்ணன், தஞ்சையிலிருந்து
@திண்டுக்கல் தனபாலன்...
ReplyDeleteதொடர் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது தோழரே...
@வை.கோ. சார்...
தங்கள் உற்சாகம் தரும் பின்னுட்டத்துக்கு நன்றி ஐயா.
@ சூர்ய ஜீவா...
பின்னோக்கிப் போன மனசு நிகழ் காலத்துக்கு இழுத்து வரப்படும் போதுதான் ஏக்கம்.. இல்லையா?
@ கவியாழி கண்ணதாசன்...
எழுதிய பின் நானும் ரசித்த வரிகள் இவை... நன்றி ஐயா.
@ வெங்கட் சகோ.& ஆதி...
தொடர் வருகையும் உற்சாகப் படுத்தலும் மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி அன்பு இணைக்கு.
@ சமீரா...
அட! விரைவில் சித்திக்கட்டும் தோழி.
@கே.பி. ஜனா...
நுட்ப வாசிப்புக்கு நன்றி.
@ இராஜ இராஜேஸ்வரி ...
மிக்க மகிழ்வும் நன்றியும் தோழி.
@ அப்பாதுரை ஐயா...
நிஜ இரயில் கொஞ்சம் திடுக்கிட வைத்தது.//
நிஜ ரயில் வந்தபோது வாசிப்பாளரும் சிறுபிராயத்து ரயிலுக்குள் இருந்தாரோ...
என்னைக் கெளரவித்த கருத்துக்கு மகிழ்ச்சி றெக்கை கட்டுகிறது மனசில்.
@ தங்கத் தம்பி (உங்க சகோதரிகளுக்கு தான்)தஞ்சை கண்ணன்...
கடந்த காலத்தை விட நிகழ் காலத்தின் நிகழ் இனிமைகளை இன்னொரு கவிதை ஆக்கி விடுவோமா.... விரைவில்.
வருகையும் கருத்தும் எப்போதும் இனிதாகவே. நன்றி தோழர்.[சகோ என்றால் உரிமைச் சண்டை வந்துவிடக் கூடும்:))]
கும்மாள ரயிலின் வசந்த பொழுதுகள் பெருமூச்சா,,,,,,ய எனக்குள்ளும்
ReplyDelete