15 கருத்துரைகள்
 1. ஹா ஹா.. இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா..

  அது போகட்டும். இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியுமா.. தெரியாதா..

  தெரிந்தால் அதையும் பதிவிடவும் !

  ReplyDelete
 2. நல்ல கேள்விகள்... பதில் சொல்ல முடியாமல் தான் கேள்வி-பதில் பகுதி நின்று விட்டதே! :)

  ReplyDelete
 3. நல்ல பல கேள்விகளைக் கொடுத்துள்ளீர்கள்.

  யோசிக்கத்தான் வைக்கிறது.

  இவற்றைப்பற்றியெல்லாம் நானும் சில பதிவுகளில் எழுதியுள்ளேன்.

  அவைகளும் கேள்விகளா? அல்லது பதில்களா? என தாங்கள் தான் படித்துவிட்டுக் கருத்துச்சொல்ல வேண்டும்.

  இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_874.html
  பிரார்த்தனை

  http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html
  கடவுள் இருக்கின்றாரா .... இல்லையா?

  http://gopu1949.blogspot.in/2012/04/17.html


  >>>>>> தொடரும் >>>>>>>

  ReplyDelete
 4. முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணிய்ங்களின் அடிப்படையிலேயே புதிய பிறவியில் நாம் பிறக்கிறோம் என்பதற்கான சில நம்பத்தகுந்த ஆதார விளக்கங்கள் பற்றி ஒரு ஞானி பேசியுள்ளது என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

  அதைப்பற்றி நான் இன்னும் எழுதவில்லை.

  அதிலும் இந்தக்கேள்விகளுக்கான சில விடைகள் உள்ளன.

  அதையும் என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள்வோ, முற்றிலும் மறுக்கவோ முடியாமல் தான் உள்ளது. அந்தக்குழப்பத்தினாலேயே நான் இன்னும் அதை வெளியிடாமல் உள்ளேன்.

  ஆனாலும் அதை சுத்தமாக மறுக்கவே முடியாமல் ஏற்றுக்கொள்ளும் படியாகவே தான் உள்ளது.

  அதுபோன்ற நியதியை [தலைவிதியை] மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. .

  -oOo-

  ReplyDelete

 5. ஒரு பதிவெழுத பெண்பதிவர்களின் இடுகைகளை வாசித்துக் கொண்டு வரும்போது, ‘ஆஹா. இங்கே ஒரு வித்தியாசமான பதிவர், பதிவு என்று தோன்றியது. என் பதிவுகளைப் படிப்பவர்களில் உங்களைப் பார்த்த நினைவு இல்லை. நீங்கள் படித்திருந்தால் இது போன்ற பல கேள்விகள் எழுப்பி என் கருத்துக்களையும் பதிவிட்டிருந்தைக் கண்டிருக்கலாம். நடப்பு நிகழ்வுகளில் பெண் பதிவர்களின் கருத்துக்களை அறியவே என் வலைப் பயணம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்ல கேள்விகள் தான். பதில் தான் கிடைக்காது....:)

  ReplyDelete
 7. வணக்கம் தோழியே. நான் வெகுநாட்களுக்கு பிறகு உங்களது blogspotஐ பார்க்கலாம் என்று வந்தேன் (மன்னிக்க வேண்டும், தினமும் பார்க்க நேரமில்லை). Latest இடுகை முழுவதும் கேள்விகள். கண்ணதாசனின் "அர்தமுள்ள இந்துமதம்" படித்திருக்கிறேன். அதில் இங்கு இருக்கும் பல கேள்விகளுக்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய பதில் இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. தவிரவும், கேள்விகளில் இரண்டுவகை உண்டு.
  (1) விடையைத்தேடி கேட்கப்படும் கேள்விகள்.
  (2) கேட்கவேண்டும் என்று மட்டுமே கேட்கப்படும் கேள்விகள்.
  மூன்றாவது வகை ஒன்றும் உண்டு. மறவர்களை குழப்பும் நோக்கத்துடன் மட்டுமே கேட்கப்படும் கேள்விகள்.

  ஏதோ சும்ம சொல்லனும்னு தோனினத சொன்னேங்க. தப்பா எடுத்துக்காதிங்கோ.
  கண்ணன், தஞ்சையிலிருந்து.

  ReplyDelete
 8. நிஜமாகவே இருக்கும் கேள்விகள்தாம். தயவு செய்து தெரிந்தவர்கள் பின்னூட்டதிலேயே பதில் சொல்லுங்களேன். விஜய்.

  ReplyDelete
 9. இப்பதிவின் நோக்கம் வெறும் நகைச்சுவைக்காக என்றால அடிக்க வரமாட்டீர்கள் தானே... கேள்விகளின் இறுதியில் அடைப்புக் குறிக்குள் உள்ளதை நிதானமாக மறுபடி படிக்கவும்.

  ரிஷபன் சாரும், சகோதரர் வெங்கட்டும், ஆதியும் பதிவிட்ட போதிருந்த என் மனவோட்டத்தை பிரதிபலித்து இருக்கின்றனர்.

  ஆனால் இதன் உள்ளுறையாக சிலவற்றை சொல்லலாம்.

  ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் 12 வயது தாண்டியிருப்பாள். அவளது அறிதலும் புரிதலும் ஆர்வமும் எஞ்சிய குழந்தைமையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

  பதிவு வகைப்பாட்டை 'அறிந்தும் அறியாமலும்' என்று வைத்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

  எந்த வயதிலும் எத்தனை அறிந்திருந்தாலும் அறிய வேண்டியது தீராமல் தான் இருக்கிறது.

  ஆன்மீகத்தை இழிவு படுத்துவதோ மதச் சார்போ இப்பதிவின் நோக்கமல்ல.

  'நசிகேத வெண்பா', 'கலர்சட்டை நாத்திகன்' இவற்றிலும் பல அறியாதனவற்றுக்கும் புரியாதனவற்றுக்கும் விளக்கங்கள் கண்டு வியக்க முடிகிறது.

  வை.கோ. சார் (பதிவுலகின் கலைக்களஞ்சியம்), G.M.B.சார் போன்றோர் பதிவுகளை படித்தும் தெளிவு பெறலாம்.

  ஆர்.ஆர்.ஆர். சார் ஒருவாசகம் என்றாலும் திருவாசகமாய் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டார்.

  பழந்தமிழ் இலக்கண நூல்களில் வினாக்கள் ஆறு வகையாக சொல்லப் படுகின்றன கண்ணன். உங்க வகைப்பாடும் நல்லாத்தான் இருக்கு இல்ல... பயப்படாம மனசில் பட்டதை சொல்லுங்க தோழரே.

  நான் நினைக்கிறேன்... விஜய் வளரிளம்பருவத்தில் இருக்கிறாரென.

  வளர்பருவத்தில் அறிந்ததும், அறிய வேண்டியதும் கேள்விகளைப் பட்டியலிட்ட பெண்ணிடம் கேட்க வேண்டியது.

  இக்கேள்விகள் ஒவ்வொன்றையும் விவரிக்கவோ விளக்கவோ புகுந்தால் அது தனிப்பெரும் புத்தகமாகிவிடும் என்று எண்ணியோ என்னவோ அச்சிற்றிதழாளர் பின் வாங்கியிருப்பார்.

  தினமொரு பதிவு எழுத விழைபவர்கள் இக்கேள்விகளை ஒவ்வொன்றாக அலசி ஆராயலாமே.

  அனைவரது வருகையும் கருத்துப் பகிர்வும் நட்பை பலப்படுத்தி நெகிழச் செய்கின்றன. நன்றி!

  ReplyDelete
 10. இந்தக் கேள்விகளுக்கு பதில் யாருக்குத் தெரியும்?

  ReplyDelete
 11. முதலில் அச் சிந்தனைத் தீண்டலைக் கொண்டிருந்த அச் சுட்டிப் பெண்ணுக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்!

  இத்தகைய கேள்விகளுக்கு அவள் தன் வாழ்வியல் அனுபவங்களூடாக (மற்ரவ்விடைகளைக் கண்டடைகின்ற போது அவளுடய வாழ்க்கை அவளுக்குச் முழுவதுமாகச் சித்தித்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

  அச் சுட்டிப் பெண்ணுக்கும் அப்பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும் என் அன்பார்த்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் அவை இருக்கும்…….

  (பகிர்ந்து கொண்ட நிலாவுக்கு நன்றி.)

  ReplyDelete
 12. முதலில் அச் சிந்தனைத் தீண்டலைக் கொண்டிருந்த அச் சுட்டிப் பெண்ணுக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்!

  இத்தகைய கேள்விகளுக்கு அவள் தன் வாழ்வியல் அனுபவங்களூடாக விடைகளைக் கண்டடைகின்ற போது அவளுடய வாழ்க்கை அவளுக்குச் முழுவதுமாகச் சித்தித்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

  அச் சுட்டிப் பெண்ணுக்கும் அப்பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும் என் அன்பார்த்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் அவை இருக்கும்…….

  (பகிர்ந்து கொண்ட நிலாவுக்கு நன்றி: முன்னய பின்னூட்டத்தில் எழுத்துக்கள் தாறுமாறாக இடம் பெற்று விட்டதால் மீண்டும்...)

  ReplyDelete
 13. எந்த வயதிலும் எத்தனை அறிந்திருந்தாலும் அறிய வேண்டியது தீராமல் தான் இருக்கிறது.

  கேள்விகேட்ட பெண்ணின் தேடலே வாழ்வை வெற்றிகரமாக்கும் ..

  ReplyDelete
 14. இவ்வ‌ள‌வு "தீராத‌ கேள்வி"க‌ளோடு தான்
  எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  இத‌ற்கெல்லாம் நாமே ப‌திலை க‌ண்ட‌டை‌ந்து
  விடுவ‌து போல‌.

  உண்மை எனில் அது அள‌வாய் செரிவாய் இருக்கும் என்பார்க‌ள்.
  இங்கு இந்த‌ எட்டாம் வ‌குப்பு குழ‌ந்தையின் ஐய‌மும் அப்ப‌டியே.

  ReplyDelete