பண்டிகை என்றாலே பெண்களுக்கு கடும் வேலைச் சுமை! ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான நேர நெருக்கடியையும் உடல் சோர்வையும் தர மறப்பதில்லை. இருந்தாலும் பண்டிகைகளையும் பாரம்பர்ய பழக்கவழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது பொறுப்பாகிறது. குடும்பத்தினரின் குதூகலத்துக்காக தரப்படும் விலை அது.
“உன்னால் முடிந்ததை செய்; முடிந்த போது செய். பண்டிகை என்பது கொண்டாட்டமாக இருக்கவே. கட்டாயம் செய்தாக வேண்டுமென இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து சிரமப்படாதே; சிரமப் படுத்தாதே. சுத்தப் படுத்தும் நாட்களையும், பட்சணம் செய்யும் நாட்களையும் நமக்கான பண்டிகை நாட்களாக நினைத்துக் கொண்டால் போயிற்று. நியதிகளை விலங்குகளாக்கிக் கொள்ளாதே”
இது எல்லா பண்டிகைக்கு முன்னும் என் கணவர் அன்போடு சொல்வது.
காவிரியின் பாராமுகத்தால் எந்த விவசாயியும் தம் வீட்டு நெற்களஞ்சியங்களை தை முதல் நாளுக்காக சுத்தம் செய்ய அவசியமற்று அல்லவா போனது! கண்ட சொற்பத்தையும் களத்திலேயே வந்த விலைக்கு தள்ளியல்லவா வரும் நாட்களை அவன் தள்ளியாக வேண்டும்?! பணப்புழக்கம் பகல்கனவான பின் களஞ்சிய அறைகளையெல்லாம் காற்றோட்டத்துக்கு சன்னல் வைத்து வீட்டுப் புழக்கத்தை விசாலமாக்கிக் கொண்டனர் பலர்.
மாத சம்பளக்காரர்கள் பாக்கியவான்கள். தடங்கலில்லாமல் வண்டி ஓடுவதால்... கடையில் சன்ன ரக, உயர்ரக அந்த ரக இந்த ரக அரிசியெல்லாம் விலைக்கு கிடைத்து விடுவதால்... அவசியமெது அனாவசியமெதுவென திட்டமில்லாமல் வரும்படி போதாமல் திண்டாடுபவர்களுக்கும் வட்டிக்கு கடன் பெற ஆயிரமாயிரம் வழிகள் காட்டப்படுவதால்...
பிள்ளைகளிருவரும் வீட்டிலில்லாததால் அவர்கள் அறையை தூசு தட்டினேன் நேற்று. மகளின் அறையில் தன் மூன்றாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து பத்திரப்படுத்தியிருந்த அவளின் சேகரிப்புகளை (ஞாபகார்த்தங்களை) சுத்தப்படுத்திக்கொண்டிருந்த போது நழுவி விழுந்ததொரு கடிதம். மகள் ஒன்றரை வயது சிறுமியாயிருந்த போது எங்கம்மா எனக்கு எழுதிய கடிதம் அது.
அன்பிற்குரியவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஏதேனுமொரு பொருள் இருக்கும் என்னிடம். அவற்றைப் பத்திரப் படுத்தி அவ்வப்போது எடுத்துப் பார்த்து அவைகளில் அவர்களைக் கண்டு நெகிழ்ந்து.... எங்கம்மா பெட்டியில் கோளவடிவ எவர்சில்வர் தட்டு ஒன்று இருக்கும். அவங்க அண்ணன் சாப்பிட்டதாம். அண்ணன் இறந்து பல வருடங்களாகியும் அதைப் பூட்டி வைத்துக் கொண்டிருந்த அம்மாவை என் சிறு பிராயத்தில் புரியாமல் பிரம்மித்திருக்கிறேன். காலம் எனக்குப் புரிய வைத்தது. இப்போது என் மகளுக்கும்.
வளர்ந்தபின் என் சேகரிப்பிலிருந்த அக்கடிதத்தை தனக்கென பத்திரப்படுத்திக் கொண்டாள் மகள். தூறலில் துளிர்த்த அருகாய், புரண்டெழும் அலையில் உருண்டு வரும் சிப்பியாய் நினைவுகள் ...
அடுப்பில் பொங்கும் பொங்கல் அன்றைய உணவாய் வயிற்றுக்கு . இந்த நினைவுப் பொங்கல் மனசுக்கு. வீட்டு தெய்வத்தை கும்பிட மாட்டுப் பொங்கல் வரை காத்திருக்க வேண்டுமா என்ன? தொடங்கிவிட்டது நினைவுகளின் தொழுகை. சிறகு விரித்த நினைவுப் பறவை கூடடைய ஆகும் சில பொழுது.

நல்லதொரு பகிர்வு. நானும் தங்களைப் போல் தான். ஞாபகார்த்தமாக நிறைய பொருட்களை சேர்த்து வைத்துள்ளேன். இதைப் பற்றி முன்பு என்னுடைய பதிவு ஒன்றும் உண்டு.
ReplyDeletehttp://kovai2delhi.blogspot.in/2010/09/blog-post_23.html
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
நினைவுப் பொங்கல் சிறகடித்த பறவையின் மலரும் நினைவுகள்..அருமை.
ReplyDeleteபண்டிகை நினைவுகள் நல்ல மொறு மொறு!
ReplyDeleteநினைவோ ஒரு பறவை....
ReplyDeleteவிரிக்கும் அதன் சிறகை.....
பழைய கடிதங்கள் தரும் இனிய, நெகிழ்வான உணர்வுக்கு இணையே இல்லை நிலா....
நல்லதொரு நினைவுப் பொங்கல்.என்னிடமும் இருக்கிறது ‘அத்தகைய’ கடிதங்கள்.
ReplyDeleteபுதுவருட பொங்கல் வாழ்த்துக்கள் நிலா.
என் அம்மாவின் கையெழுத்தும் இதே போலத்தான் இருக்கும்.
ReplyDeleteபார்க்கும் போது எறு எழுத்துக்களாய் நில்லாமல்.. எதிர் நின்று பேசும் விதமாய்.
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅம்மா எழுதிய ஒரு கணக்கு சீட்டை கூட பத்திரப்படுத்தும் நான் உணரமுடிந்தது.
ReplyDeleteஉங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/
அன்புடன்
மனோ சாமிநாதன்
பழமையில் இனிமை காண்பவர்களால்தான் இந்த மாதிரி நினைவுப்பொக்கிஷங்களை சேகரித்து வைக்க முடியும். உங்கள் பதிவு அருமை! நான் கூட சில மாதங்களுக்கு முன் என் பாட்டியின் கடிதத்தை என் அம்மவிடம் கேட்டிருந்தேன். நைந்து போன அந்தக் கடிதத்தை டேப் வைத்து ஒட்டி என் 94 வயது அம்மா என்னிடம் போன தடவை ஊருக்குச் சென்ற போது தந்தார்கள்!
ReplyDeleteபொக்கிஷமான சில பழைய கடிதங்கள் பார்க்கவும் மீண்டும் படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமானவைகள் தான்.
ReplyDeleteநானும் என் எழுத்துக்களின் ரஸிகையான மிகவும் வயதானதோர் அம்மாளின் கடிதத்தை என் பதிவினில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/03/3.html
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள்.