14 கருத்துரைகள்
 1. பிரிவு கொடுந்துன்பம் தான்....அதை தங்களின் வரிகள் பறைசாற்றுகின்றன....

  ஒரு நல்லது நடப்பதற்கு தானே...இந்த சிறிய பிரிவு...விரைவில் உங்களைத் தேடி வருவார்கள்.

  ReplyDelete
 2. அழகான கவிதை. அனைத்தும் அருமையான வரிகளே

  //கொடுக்க நீயும்
  வாங்க நானும் இருக்க
  குடிக்க வேண்டியவர்கள்
  இங்கில்லையே இப்போது.
  போயேன் புண்ணியவானே...
  பிரிவின் கொடுந்துன்பம்
  எனைத் தீண்டிடாமல்
  உன் மணிநாவடக்கி.//

  வெகு அருமையான உணர்வுகளை அழகாகச்சொல்லியுள்ளீர்கள்.
  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. முதலாவதும்,மூன்றாவதும் தாய்மை கொண்டுள்ளது.அழகான கவிதைகள் நிலா !

  ReplyDelete
 4. தாயுள்ளம் புரிகிறது சகோ....

  பிரிவு சில சமயங்களில் கொடுமை தான்.....

  ReplyDelete
 5. அவரவர் பாதையும் அவரவர் பயணமும் தனித்தனி நிலா. உங்களின் மூலமாக அவர்கள் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு கருவி அவ்வளவு தான். மேலும் திசைகாட்டி, பாதுகாவலன், உணவூட்டி……பாசத்துக்கும் பந்தத்துக்கும் அதிகம் அடிமையாகாதீர்கள் நிலா.

  அது ஆபத்து. ( இந்த எழுத்துக்களும் சொற்களும் சொல்லுகின்ற அர்த்தங்கள் கடுமையாக இருப்பதையிட்டு என்னை மன்னியுங்கள். உண்மைகள் சில வேளை மிகச் சூடாக இருந்து விடுகிறன. )

  இது என் அனுபவமல்ல: பார்வைகள்!

  ReplyDelete
 6. யாகத் தீயிலிட்ட ஆகுதிகள்
  தேவர்களை அடைவது போல்
  உங்களிருவர்க்காகவுமாய்
  உண்டு கழிக்கிறோம் நாட்களை...
  நாங்கள்.
  வயிற்றில் சுமந்த நாள் கடந்தும்
  மனசில் சுமக்கிறோம்.


  மனதில் சுமக்கும் நாட்கள் அதிகம் ..சுகமான சுமைகள் !

  ReplyDelete
 7. இதுதான் தாய்மை! சதா மக்களை தன் மனக்கண்ணில் தோன்றவிட்டு மக்களின் நினைவிலேயே சுகித்திருப்பது அது..! மது, சிபி கொடுத்துவைத்த மக்கள்தான், அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. யாகத் தீயிலிட்ட ஆகுதிகள்
  தேவர்களை அடைவது போல்
  உங்களிருவர்க்காகவுமாய்
  உண்டு கழிக்கிறோம் நாட்களை...
  நாங்கள்.
  வயிற்றில் சுமந்த நாள் கடந்தும்
  மனசில் சுமக்கிறோம்.//

  உண்மை, உண்மை.
  மனசில் நாள் தோறும் சுமந்து கொண்டு தான் இருக்கிறோம்.
  இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னது போல் சுகமான சுமைதான்.
  ReplyDelete
 9. குழந்தைகளைப் பிரிந்து வாடும் தாயின் தனிமையும் வலியும் புரிகிறது. சிறகுகள் முளைத்ததும் குழந்தைகள் பறக்கத்துடிப்பது வாழ்க்கையின் யதார்த்தம். வயது ஏற ஏற நெடுந்தூரம் அவர்கள் பறக்க ஆசைப்படுவார்கள். ஆயிரம் படித்திருந்தாலும் குழந்தைகளின் விஷயத்தில் மட்டும் ஒரு தாய் குழந்தையாகி விடுகிறாள். அவளே தான் குழந்தைகள் உயர உயர பற‌க்க வேண்டும் என்று தூண்டி விடுவாள். அவளே தான் ' அவர்கள் ஏன் பறந்து போனார்கள்' என்றும் வெதும்புவாள். ஏனென்றால் அன்பும் பாசமுமாய் தவிக்கும் தாய் அவள்!

  எனக்குப்புரிகிறது நிலா! தவிப்பை புறக்கணித்து உற்சாகமாய் இருங்கள்!!

  ReplyDelete
 10. \\பிரிவின் கொடுந்துன்பம்
  எனைத் தீண்டிடாமல்
  உன் மணிநாவடக்கி.///
  உண்மையை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி

  ReplyDelete
 11. பெயர் மாற்றினால் அதே தாக்கம்.. இங்கும்.

  ReplyDelete
 12. வணக்கம். நிலாமக்ள்.

  உங்களின் கவிதைகள் வெகு ஊடுருவிய மெருகேற்றமாய் இருக்கின்றன. இந்த மூன்றுகவிதைகளும் மூன்று தளங்கள் என்றாலும் வலிமையான வீச்சமுடன் அதன் கருத்தை மனத்தில் அழுந்த ஊன்றுகிறது. உள்தள்... நிதானித்து நீரருந்து...உண்டு கழிக்கிறோம் நாட்களை... அபாரமாய் போகிறீர்கள்.. தொடரந்து பயணியுங்கள்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அப்பா!!!! என்ன அழகான ரசனையான வரிகள் எல்லாமும் நல்லா இருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. நல்ல கவிதைகள்.கவிதைகளின் மெருகேற்றம் நன்றாகயிருக்கிறது.

  ReplyDelete