(பட உதவி : http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/11/blog-post_18.html#comment-form)
அமிழ்தாய் தரையிறங்கும்
மழைத் தாரைகளுக்கு
மரங்களும் செடிகளும்
அசையாது ஆட்பட்டிருக்க
பாத்தி கட்டிய வயலையும்
பயணிக்கும் பாதையையும்
பாகுபாடின்றி அரவணைக்கின்றன
மழைக்கரங்கள்!
ஆசானின் தமிழ் மழையில்
இலயித்திருக்கும் வகுப்பறை போல்
நெடிதுயர்ந்த மரங்களும் மலையும்
சொல்லில் அடங்கா சுகமாய்
உள்வாங்கி உயிர் பெருக்க
நனையாமலே ஈரமாகும்
வேடிக்கை பார்க்கும் மனசு.
அமிழ்தாய் தரையிறங்கும்
மழைத் தாரைகளுக்கு
மரங்களும் செடிகளும்
அசையாது ஆட்பட்டிருக்க
பாத்தி கட்டிய வயலையும்
பயணிக்கும் பாதையையும்
பாகுபாடின்றி அரவணைக்கின்றன
மழைக்கரங்கள்!
ஆசானின் தமிழ் மழையில்
இலயித்திருக்கும் வகுப்பறை போல்
நெடிதுயர்ந்த மரங்களும் மலையும்
சொல்லில் அடங்கா சுகமாய்
உள்வாங்கி உயிர் பெருக்க
நனையாமலே ஈரமாகும்
வேடிக்கை பார்க்கும் மனசு.
படத்தில் இருக்கும் மழைபோலவே உங்கள் கவிதை மழையில் நனைந்த அனுபவம்! சுகமான அனுபவம்...
ReplyDeleteநல்ல கவிதை சகோ. பாராட்டுகள்.
//சொல்லில் அடங்கா சுகமாய்
ReplyDeleteஉள்வாங்கி உயிர் பெருக்க
நனையாமலே ஈரமாகும்
வேடிக்கை பார்க்கும் மனசு. //
கவிதை மழை அழகோ அழகு தங்களின் ஈரமான மனது போலவே! பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK
கிவிதையில் கண்கள் பனித்தன!
ReplyDeleteமிக்க நன்றி.{படம் இணையத்தில் எடுத்தது}
@சந்திர வம்சம்
ReplyDeleteகவிதை என திருத்தி வாசிக்கவும்.
படம் மிகவும் அருமை...
ReplyDeleteவரிகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
மழை எனில் நனைவதில் தான் முழுமை.(மானசீகமாக வேணும்)
ReplyDeleteஉங்கள் கவிதையில் கூட ஆசானின் தமிழே ஆசானமிட்டிருக்கிறது.
அமிர்த மழை!! விண்ணில் இன்னுமொரு பால்கடல் கடைசலோ?
படம் மிகப் பொருத்தமாய்.
கவிதைக்குப்பின், படமா? படம் பார்த்ததால் கவிதையா?
குழந்தை, டீன் ஏஸ் ஆக டீ சர்டில் மாற்றம் தெரிகிறது.
மழை எனில் நனைவதில் தான் முழுமை.(மானசீகமாக வேணும்)
ReplyDeleteஉங்கள் கவிதையில் கூட ஆசானின் தமிழே ஆசனமிட்டிருக்கிறது.
அமிர்த மழை!! விண்ணில் இன்னுமொரு பால்கடல் கடைசலோ?
படம் மிகப் பொருத்தமாய். கவிதைக்குப்பின், படமா? படம் பார்த்ததால் கவிதையா?
குழந்தை, டீன் ஏஸ் ஆக டீ சர்டில் மாற்றம் தெரிகிறது.
கவிதை மழைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteவான்மகனுக்கும் மண்மகளுக்கும் இடையே மழைத் துளிகளின் காதல் பாலம்...
ReplyDeleteஇந்தக் காதலுக்கு சாட்சியாய் மலையும் மரங்களும் சமைந்து நிற்கின்றன.
செடிகளின் மலரையெல்லாம் பலவந்தமாய்ப் பறித்து மண் காதலிக்காய் தூவும் மழைக்கரம்.
வயல்களின் பசுமை ஆடையை காற்றுப் பெருமூச்சால் அலைக்கழித்து அலைக்கழித்து ஒரு தவிப்பின் ஆட்டம்.
மின்னலாய் கண் சிமிட்டல்கள்..
அதிக நேரம் காதலரை உற்றுப் பார்க்காதீர்..
அவர்கள் வெட்கப் படக் கூடும்..
உங்களை எண்ணி வெட்கப் படக் கூடும்...
ஆசானின் தமிழ் மழையில்
ReplyDeleteஇலயித்திருக்கும் வகுப்பறை போல்//
ஆகா
கொட்டும் மழையை குளிரோடு ரசிக்கும் சுகத்துக்கு இதை விட ஒரு சிறந்த உவமை வேறேதும் இவ்வுலகில் காட்ட இயலாது.
வெகுவாய் ரசித்தேன்.
படம் மிக அருமை நிலா!
ReplyDeleteகவிதை எனக்கென்னவோ இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.படத்துக்குப் பிறந்த கவிதை போலும்!
நனையாமலே ஈரமாகும்
ReplyDeleteவேடிக்கை பார்க்கும் மனசு. // நனைக்காமலே ஈரமாக்கும், அது மழையின் மனசு! அழகான கவிதை!
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
சொல்லில் அடங்கா சுகமாய்
ReplyDeleteஉள்வாங்கி உயிர் பெருக்க
நனையாமலே ஈரமாகும்
வேடிக்கை பார்க்கும் மனசு. //
மழையை வேடிக்கை பார்க்கும் போது மனசு நிறைந்து தான் போகிறது. சிறுவயதில் மழையில் நனைய ஆசை படுவேன் நனைந்து வந்தால் அம்மாவிடம் திட்டு வாங்குவேன். மழை என்றலே துள்ளி குதித்து சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது எஅனது வாடிக்கை.
கவிதைக்கு வாழ்த்துக்கள்.
வலைச்சரம் மூலம் வந்தேன்.
ஆசானின் தமிழ் மழையில்
ReplyDeleteஇலயித்திருக்கும் வகுப்பறை போல்
தமிழாய் இனிக்கும் வரிகள் அற்புதம்...