நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

இங்குமிருக்கிறார் ...

Friday, 28 December 2012
தனுர்பூசை   தீபாராதனை காண
கோயில் வாசல் வரை
நீண்டிருந்தது கூட்டம்

சிலைமேல் பூக்கள் அர்ச்சிக்கப் பட்டன
மந்திர உச்சாடனங்கள்  காதுகளை நிறைத்தன
காத்துக் கிடப்பதில் கால்கள் நொந்துபோய் 
'சாமிக்கு  என்னம்மா செய்யறாங்க?'
தாயை கேட்டது  ஒரு நடைபருவக் குழந்தை

'அர்ச்சனை செய்யறாங்க' என்று
வாய் மூடி கரம் குவித்தார் அத்தாய்.
'நமக்கெல்லாம் செய்யமாட்டாங்களாம்மா ?'
தொடுத்தது தன் அடுத்த கணையை பொதுவில்...

என் கையிலிருந்த பூக்களை
அந்த மழலையின்  தலை மேல் தூவிவிட்டு
வரிசை விட்டு வெளியேறினேன்
திருப்தியுடன் .

6 கருத்துரைகள்:

 1. குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றால் இது சரிதானே! எவ்வளவு பக்கத்தில் நேர்ந்திருக்கிறது உங்களுக்கு தெய்வ தரிசனம்!! :)

 1. எங்குமிருக்கும் இறைவனை மழலை காட்சியாக்கியதோ ..!

 1. //என் கையிலிருந்த பூக்களை
  அந்த மழலையின் தலை மேல் தூவிவிட்டு
  வரிசை விட்டு வெளியேறினேன்
  திருப்தியுடன் .//

  குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்.
  படித்த எனக்கும் திருப்தியே.

 1. ஹேமா said...:

  ஆகா.....நிலா....கடவுளைக் கண்டிருக்கிறீர்கள் !

 1. vasan said...:

  குழ‌ந்தையும், தெய்வ‌மும்.....
  தெய்வ‌மே குழ‌ந்தையாய்.....

 1. kannan said...:

  தோழியே,
  உங்கள் மீது எனக்கு மதிப்பு கூடுகிறது. 'அன்பே சிவம்' திரைப்படத்தில் கமலஹாசனின் வசனம் நினைவு வருகிறது. குழந்தையை கடவுளாய் பார்த்த உங்களுக்குள்ளும் ஒரு கடவுள் இருக்கிறார் என்று நான் சொன்னால், உங்களால் மறுக்க முடியுமா? அது எப்படி எனக்குத்தெரியும் என்று கேட்டு, "நானும் கடவுள்தான்" என்று என்னை பதில் சொல்ல வைக்காதீர்கள், please.

  கண்ணன், தஞ்சையிலிருந்து

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar