நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நீரின்றி அமையாது உலகு

Wednesday, 3 October 2012

அருவி நீர்:
          உடல் வன்மையை உண்டாக்கும். இரத்த பித்த நோயை அகற்றும். பெண்களின் வெள்ளைப் போக்கை நிறுத்தும்.

ஆற்று நீர்:
            வாத பித்த நோய்களைச் சமனப்படுத்தும். நாவறட்சியை நீக்கும். விந்தைப் பெருக்கும்.

கங்கை நீர்:
            உடல் எரிச்சல், நாவறட்சி, குன்மம், இளைப்பு, உள்சூடு, ஈளை, மிகு பித்தம் போன்றவற்றை நீக்கும்.

தாமிரபரணி நீர்:
           கண் புகைச்சல், காய்ச்சல், எலும்புருக்கி, ஈளை நோய்களை அகற்றும்

காவிரி நீர்:
           இருமல், வயிற்றுப் பொருமல், இரைப்பு, சளிக்கட்டு, நீர்க்குற்றம், நாவறட்சி ஆகியவற்றை விலக்கும்.

கோதாவரி நீர்:
              பல்வகைச் சொறிகளை நீக்கும். உடலில் மினுமினுப்பை ஊட்டும்.

வைகை நீர்:
            சோகை, கரப்பான், உடல் எரிச்சல், உதறுகால், விந்துக்குறை ஆகியவற்றை அகற்றும்.

நர்மதை நீர்:
           காய்ச்சல், விக்கல், வாந்தி, காமாலை, வயிற்றுப் பொருமல், கைகால் எரிச்சல், பெருமூச்சு, அயர்ச்சி ஆகியவற்றை நீக்கும்.

ஊற்று நீர்:
           பித்தம், மிகு வறட்சி ஆகியவற்றை விலக்கும்.

ஏரி நீர்:
            வாயுவை உண்டாக்கும்,

உப்பு நீர்:
            குடல் நோய், ஓடு வாயு ஆகியவற்றை குணப்படுத்தும்.

ஓடை நீர்:
           நாவறட்சியை உண்டாக்கும். உடல் வளமையைக் குறைக்கும்.
குளத்து நீர்:
          வாத நோய் மிகச் செய்யும். நீர் ஊற்றுப் போக்குள்ள குளமாக இருப்பின் உடல்நலத்துக்கு மிக நல்லது.

அல்லிக்குளத்து நீர்:
           விந்தைக் கெடுக்கும். அஜீரணக் கழிச்சலை தோற்றுவிக்கும். புண், சொறி முதலியவற்றை உண்டாக்கும்.

தாமரைக் குளத்து நீர்:
           வாத, பித்தக் கலப்புக் கோளாறுகளை உண்டாக்கும். தாடை நோயைத் தோற்றுவிக்கும். காய்ச்சல் உண்டாக்கும்.

சருகு ஊறிய நீர்:
            காய்ச்சலைத் தோற்றுவிக்கும்.

கடல்நீர்:
             உடல் குடைச்சல், இரத்தக் குன்மம், பெருநோய், வயிற்று நோய், பெரு வயிறு, நுரையீரல் தொடர்பான நோய்களை விலக்கும்.
 கடல் நீரைக் காய்ச்சி அருந்தினால் மல,நீர்க்கட்டு, உடல் கடுப்பு, நாக்குப் பிடிப்பு, சோர்வு, பல் நோய் முதலியவற்றை விலக்கும்.

காடி நீர்:
           மருந்தின் குணங்களைக் கெடுக்கும். அஜீரணம், சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றை நீக்கும்.

பாசி நீர்:
           பாசிநீரைக் குடித்தால் உடலில் தடிப்புகள் தோன்றும். குடல் கோளாறுகள் உண்டாகும். பலவிதமான சரும நோய்கள் தோன்றும்.

பனி நீர்:
            மிகு மூத்திரம், கண் படலம், உடல் வறட்சி, ஈளை, கழிச்சல், சொறி, கரப்பான் ஆகியவற்றை நீக்கும்.

நண்டுக்குழி நீர்:
            உடல் வெப்பம், எரிச்சல், மிகு நாவறட்சி, வாந்தி ஆகியவற்றைக் குணமாக்கும்.

பாறை நீர்:
             உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். காய்ச்சலை உண்டாக்கும்.
சுக்கான் பாறை நீர்:
 கோழைக் கட்டு, சளி, சிறுநீர்க்கடுப்பு போன்ற குறைபாடுகளை உண்டாக்கும்.

கரும்பாறை நீர்:
           அறிவாற்றலைப் பெருக்கும். உடல் வனப்பை அதிகமாக்கும். மயக்கம், விடாக் காய்ச்சல், பித்தக் காய்ச்சல் ஆகியவற்றையும் நீக்கி உடலை நலமாக்கும்.

வயல் நீர்:
            உடல் சூடு மிகுந்தாலும் சமப்படுத்தும். தளர்ந்த உடலை முறுக்கேற்றும். காய்ச்சல் வேகத்தைக் குறைக்கும்.

வெந்நீர்:
             வெந்நீரை உணவு உண்டவுடன் அருந்தினால் சீக்கிரம் செரிமானமாகும். நெற்றி நோய், சீதக்கட்டு ஆகியவற்றையும் விலக்கும்.
            வெந்நீரை ஆற வைத்துக் குடித்தால் கீல் பிடிப்பு, மார்புச் சளி, காது குத்தல், கண்ணோய், மயக்கம், பித்த நோய், விக்கல், நாவறட்சி போன்றவற்றைக் குணமாக்கும்.
            கொதிக்க விடாது பதமாகச் சுட வைத்த நீர் குளிர் நடுக்கம், பலவகைக் கழிச்சல், மிகு காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

நன்றி: பதார்த்தகுண சிந்தாமணி.

(அது சரி... மணல் கொள்ளை , ஆற்றுப் படுகைகளில் நில ஆக்கிரமிப்பு, அண்டை மாநிலக் கெடுபிடிகள், பன்னாட்டு குடிபானங்களின் அட்டகாசங்கள் இதெல்லாம் பதார்த்த குண சிந்தாமணி படைத்தவர் அறியாதவை அல்லவா...?!)

         பதார்த்த குண சிந்தாமணியை எழுதியவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான தேரையர் என்றழைக்கப்படும் இராமத்தேவர் .

           இவர் மருத்துவ ஆராய்ச்சிகளில்  தேர்ந்தவர். அகத்தியரின் சீடர். பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் இவர் என்றும் சொல்லப்படுகிறது.

         ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் உள்ள மருத்துவ குணங்களையும் எந்தெந்த கால கட்டத்தில் எந்தெந்த உணவுப் பொருள்களை உண்ணவேண்டும் , எதைஎதை சாப்பிட்டால் நோய் வராது என விரிவாக பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.

         இவரின் பிற நூல்கள் ... மணி வெண்பா, மருந்து பாதம், ஞான போதம், நீர்க்குறி நூல், தைலவர்க்க சுருக்கம், வைத்தியர் மகா வெண்பா.
பொதிகை சார்ந்த தோரண மலையில் (கேரளம்) தேரையர் சமாதி அடைந்ததாக அறிகிறோம்.

 

7 கருத்துரைகள்:

 1. அருமையான தகவல்கள்....நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.
  கடைசி வரிகள் அற்புதம்.....ஆமா அவருக்கு தெரியாது போல....

  பகிர்வுக்கு நன்றிங்க.

 1. எதற்கும் பதிவை சேமித்து வைத்துக் கொள்கிறேன்...

  உலகம் வரும் காலங்களில் எதிர் நோக்கப் போகின்ற மிகப் பெரிய பிரச்சனை அல்லது சவால் : தண்ணீர்...

  நன்றி...

 1. ஆஹா... நீரில் இத்தனை வகைகளா? அவற்றுக்கு இத்தனைக் குணங்களா? இதுவரை அறிந்திராத தகவல்கள். நன்றி நிலாமகள்.

  பதார்த்தகுண சிந்தாமணி என்பது எப்போது வெளிவந்த புத்தகம்? யார் எழுதியது போன்ற தகவல்களும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்க நிலாமகள்.

 1. தேர்ந்து படிப்பதை உடன் பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி. ஆனால் இந்த நீர்நிலைகள் கானல் நீராகிகொண்டு இருக்கிறதே?

 1. @ கீதா...

  த‌ங்க‌ள் ஆலோச‌னையால் ப‌திவு முழுமை பெற்ற‌தாய் உண‌ர்கிறேன். ந‌ன்றி தோழி.

  நான் ப‌டித்த‌து 'அநுராக‌ம்' வெளியிட்ட‌ 'ப‌தார்த்த‌ குண‌ சிந்தாம‌ணி விள‌க்க‌ம்' என்ற‌ பிர‌ம்மான‌ந்த‌ம் என்ப‌வ‌ர் எழுதிய‌ நூலை ம‌ட்டுமே.

  தேரையாரை தேட‌ வைத்த‌து த‌ங்க‌ள் க‌ருத்துரை.

  ந‌ம் ம‌ற்றொரு 'தோழி'யின் வ‌லைப்பூவில் (http://www.siththarkal.com/) இன்று சென்று ப‌ல‌ உப‌யோக‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை அறிய‌ முடிந்த‌தும் த‌ங்க‌ள் தூண்டுத‌லால் தான்.

 1. நன்றி நிலாமகள். பதார்த்த குண சிந்தாமணி என்னும் பெயரே ஒரு ஈர்ப்பைத் தந்தது. அதனால்தான் கேட்டிருந்தேன். எள்தான் கேட்டேன், எண்ணெய் தந்து அசத்திவிட்டீர்கள். மிக மிக நன்றி.

 1. நீரைப்பற்றிய வெகு அழகான பதிவு கொடுத்துள்ள நீர் என்ன சாமான்ய ஆளா? ;))))) மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

  அப்புறம் என் அன்புச் சகோதரி மஞ்சு [மஞ்சுபாஷிணி அவர்கள்] என்னைப்பற்றி வலைச்சரத்தில் ஏதேதோ 02 10 2012 அன்று எழுதியுள்ளார்கள். தாங்கள் வந்து ஏதாவது நாலு வரிகள் எழுதினால் மிகவும் மகிழ்ச்சியடைவோம், நாங்கள் இருவரும்.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

  அன்புடன் VGK

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar