"சின்னசாமியின் கதை" (புதினம்)
ஆசிரியர்: வளவ.துரையன்
வெளியீடு: அனன்யா, தஞ்சாவூர்
பக்கம்: 234
விலை: ரூ.200/-
சாமானிய மனிதனொருவனின் கதையிலும் அசாதாரண செயல்களும், எதிர்பாரா திருப்பங்களும், வாழ்வியல் கோட்பாடுகளை விளக்கும் தத்துவ நெறிகளும் பரிபூரண அன்பும் நட்பும் உறவும் அமைந்திட சாத்தியங்கள் உண்டென்பதை ‘சின்னசாமியின் கதை' காட்டுகிறது.
நம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு சிறந்த சுயசரிதை எழுதுமளவில் இருப்பினும்,
தன்னை முன்னிலைப் படுத்தாது, நட்பை முன்னிலைப் படுத்தி நண்பனின் இடுக்கண்கள் களைந்திடவும் சமூக மேம்பாட்டுக்கு தன்னாலியன்றதை செய்யத் தயங்காமலும் இப்புதினத்தின் மாதவனும் முருகனும் செயல்படுவதை வாசிக்க வாசிக்க, நம்முள்ளும் உத்வேகம் பிறக்கிறது.
தமிழ் ஆசிரியர் மட்டுமல்ல தமிழர் அனைவருமே பேச்சு மொழியில் பிறமொழிக் கலப்பு வராமல் பேசப் பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது தற்காலத்தில்.
கதை துவங்கி இரண்டாம் பக்கத்தில் மாதவனின் மனைவி சுகுணா, “சாமி இருக்கற எடத்தைக் காட்டற வழியும் சாமிதான்” என திருப்பதி மலைக்கான பாதையை தான் வணங்கியதை நியாயப் படுத்திய தருணத்திலிருந்தே புதினத்தின் வாசிப்பு மெருகேறிற்று எனக்கு.
கதை நெடுக உரையாடல்களில் நிரம்பி வழியும் வட்டார வழக்குகள் வாசகனை கதையின் உயிர்ப்போடு ஒன்றச் செய்வதாயுள்ளன. ‘ஒங்க அப்பாரெல்லாம்' என்ற பதம் எனது சிறுவயது கிராம வாழ்வையும், எங்க ஊர் அடங்கிய பரங்கிப்பேட்டை பஞ்சாயத்து யூனியனின் பல கிராமங்களிலும் பிரபலமான என் தந்தையாரையும், பல சமயங்களில் பலர் வாயிலாக இந்த மரியாதைக்குரிய பதம் என்னுள் எழுப்பிய கிளர்ச்சியையும் மறுஆக்கம் செய்வதாய் இருந்தது.
‘சாயங்காலம், சாயுங்காலம், சாயந்திரம்' எனப்படும் மாலைக்காலம் மட்டும் ‘மாலையில' என்று பிரயோகிக்கப் பட்டிருப்பது யோசிக்கச் செய்தது. ‘காலையில' என்று சர்வ சாதாரணமாக சொல்லும் நாம் பெரும்பாலும் மாலையில என்று சொல்வதில்லை என்றே தோன்றுகிறது. மேலும் சில வார்த்தைப் பிரயோகங்களும் இத்தகைய யோசனையை எழுப்பின.
இருந்தாலும் ஐஸ்க்ரீம், 'டீ'த்தூள் என்ற இரு பதங்களைத் தவிர (ஸ்டேஷன் என்பது விளக்கத்துக்காக வேண்டி சொல்லப்பட்டது) பிறமொழிக் கலப்பின்றி வாசித்தபோது தேனின் இனிமை நாவடியில். தாங்கள் பிறமொழிக்கலப்பின்றி பேச மட்டுமன்றி எழுதவும் கைவரப்பெற்றவர் என்பதில் ஐயமில்லை. நாங்களெல்லாம் கைக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பழக்கம் இது!
அந்த அம்மன் பற்றிய வர்ணிப்பில் ‘கழுத்திலிருந்து வந்த மாலை ஓய்வெடுத்துக் கிடந்தது' நயமான ரசனை. ‘சிற்றிடையை மேலும் சின்னதாக்கும் ஒட்டியாணம்' ரசித்தேன் நான்.
அத்தியாயங்களின் நடுநடுவே இந்த சாமிகளெல்லாம் பேசிக் கொள்வது எனக்கு கண்மணி குணசேகரனின் ‘பூரணி பொற்கலை' கதையை நினைவூட்டியது. படைப்பாளியின் பாத்திரப்படைப்பில் ‘படைத்தவனை'யும் விட்டு வைப்பதில்லை! ஓரிடத்தில் அதை கதையாசிரியரிடம் தான் கேட்க வேண்டும் என்று சாமி சொல்வது, உலகைப் படைப்பவரை விட தனித்துவமானவர்கள் இலக்கியம் படைப்பவர்கள் என்ற தொனி பெருமிதப் படுத்துவதாய் இருக்கிறது.
தானே பெரியவனெனும் அகம்பாவம் தகர்ந்து நம்மினும் பெரியோர் மிகப்பலர் உண்டு என்ற ஞானம் வர மனசை விட்டு வெளியே வரத்தான் வேண்டும். சின்னசாமிக்கு கிடைத்தாற்போன்ற உன்னத நண்பர்கள் கிடைப்போர் பாக்கியசாலிகளே.
மாதவன் அப்பாவிடம் பேசிய முருகனிடம் ‘சாமியும், அய்யாவும்' மாறி மாறி வந்தது போல், கம்பராமாயணத்தையும் பெரியார் எழுத்துக்களையும் ஒரு தட்டில் வைத்த உங்கள் தெளிவும் தைரியமும் எண்ணி வியக்கிறேன்.
மாதவனைப் பற்றி முருகனிடம் ஆதங்கப்பட்ட அவனது அப்பாவின் கருத்துக்களை அசை போட்ட முருகன், சாலையில் சென்ற மந்தையில் ஒட்டாமல் விலகிச் சென்ற கருப்பும் வெள்ளையும் கலந்த மாட்டை ‘அதுதான் அப்பா சொன்ன மாதவனோ' என்று ஒப்பிட்டுப் பார்க்கும் காட்சியில் தங்கள் எழுத்தாற்றல் பொலிகிறது.
முருகனின் கடித முடிவில், ‘பம்பாயில் மழையெல்லாம் முடியும்னு நெனைக்கிறேன். இங்கே இனிமேதான் ஆரம்பம்' என்ற வார்த்தைகளுக்கான பொருள் மனதில் பக்கம் பக்கமாய்.
“உறவுகள் எதையுமே நாம் தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களையோ நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். அதில் கவனமாயிருப்பவர்கள் வழிதவறாமல் தடுமாறாமல் இருக்கிறார்கள்.” எவ்வளவு சத்தியமான கருத்து!
‘கருவியில் மாட்டிக் கொண்ட ஒலிநாடா போல்' என்ற உவமை என்னை புளங்ககிக்கச் செய்தது. பொருத்தமான இடத்தில் பொருத்தமான புதுமையான உவமைகளை பிரயோகிப்பதும் ஒரு கலை! அல்லவா!!(அணிந்துரையில் உங்க நண்பர் சுட்டியவையும் அழகே)
மதுரை வீதியின் அழகில் மயங்கி கோவலன் முதல் நாள் சிலம்பை விற்க மறந்து திரும்பிய கதை கூட உவமையாக்கப் பட்டிருக்கிறது புலமைத் திறத்தால்!
அர்த்தம் தெரியாமல் மனப்பாடமாகத்தான் ஹோமம் செய்வதாக சாஸ்திரிகள் ஒப்புக் கொள்வது, பஞ்சாபியின் மனைவி விருந்தினர் செல்லும்வரை கூட காத்திருக்கும் இங்கிதமின்றி அவர்கள் பருகிய பாத்திரங்களை நீர் தெளித்து எடுத்துச் செல்வது, பஞ்சாபி தேர்தலில் நிற்க ஆதரவு கேட்டு வருவது போன்ற பல இடங்களில் ‘நம்மளவா எது செய்தாலும் நியாயம்' என்ற கண்மூடித் தனம் அற்ற தங்கள் பாணி சிலாகிப்புக்கு உரியது.
“பரம்பரையோ வளர்க்கிறதோ, சூழ்நிலையோ ஒருவனுடைய குணத்துக்கு காரணம்ன்னு சொல்றது தப்பு. எல்லாமே ஒரு குறிப்பிட்ட வயசு வரைதான். அதுக்கப்பறம் எல்லாம் அவனுடைய சொந்த விருப்பு வெறுப்புதான். அவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவன் கையில்தான்”
ஒரு தந்தை மகனுக்கிடையே உள்ள உறவும் கணிப்பும் எப்படி இருப்பது சிறப்பு என்பதை மாதவன் அவரது அப்பா மூலம் காட்டுகிறீர்கள். மகிழ்ச்சி.
“இந்தப் பதவி என்ற பிசாசு பிடித்துவிட்டால் அன்பு, நேர்மை, நன்றி போன்ற எல்லாம் பறந்து போய் விடுகிறதே!” எனும் மாதவனும் உலகியல் தெளிவில் சற்றும் சளைத்தவனல்ல என்பது தெரிகிறது.
சொல்வது போல், புதினம் என்பது கால்பந்து விளையாடுவது போலவே. பெரிய மைதானம், பலப்பல கதாபாத்திரங்கள், சம்பவங்கள்... ‘சின்னசாமியின் கதை'யில் மாதவன் நாயகன் ஆவதும் ஒரு முரண் தானோ...! ஆம். இருவருக்குமான குண விசேடங்கள், வாழ்வியல் அணுகுமுறைகள்.... மாறுபட்ட மனப்பான்மையினர் நட்பு கொள்வதும் ஒருவரையொருவர்
செப்பனிடுவதும் அறிவியல்படியும் எதிரெதிர் துருவங்கள் தானே ஒன்றையொன்று ஈர்க்கின்றன!!
“உன்னால இல்லடா, நான் எனக்காகத்தான் எப்பவும் பேசுவேன்; எங்கெங்கே எதைப் பேசணுமோ அதைப் பேசுவேன்” என நெத்தியடி அடிக்கும் முருகனும் காத்திரமான பாத்திரம் தான்!
மணிகண்டன் பாத்திரப்படைப்பும் குறைவற்றதே. அவரின் பேச்சுக்கள் ஆங்காங்கே பட்டவர்த்தனமாகவும் பட்டறிவோடும் தெறிப்பாக காண்கிறோம்.
“சிலருக்கு நெடியாய் இருப்பது சிலருக்கு வாசனையாய் இருக்கிறது. சிலருக்கு இன்பமாய் இருப்பது சிலருக்கு துன்பமாய் உள்ளது” என்றெண்ணும் குப்புசாமி வரும் காட்சி நன்றாக வடிவமைக்கப்பட்ட ஒன்று.
அகற்ற அகற்ற வந்து நெருக்கிக் கொள்ளும் பாசிக்குளம், பிரச்சினைகள் தொடரும் வாழ்விற்கான ஒட்டுமொத்த குறியீடாக காட்டியிருப்பது மிக நன்று.
மகனுக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்திய கண்ணுசாமி யாருமறியாமல் பெண் வீட்டாருக்காக பாரம்பரிய முறைப்படியும் மங்கல நாண் அணிவிக்கும் சடங்கை செய்ததை அறிந்த முருகனின் மனக்கிலேசங்கள் வாசிக்கும் நம்மையும் உறுத்தவே செய்கின்றன.
'காவல்நிலையப்படை உந்து' என்பது போன்ற செம்மையான தமிழாக்கங்களை நடைமுறையில் பழக்க வேண்டியது அவசியம் தான்.
சின்னசாமிக்கு கடைசி வரை மாதவனும் முருகனும் தோள்கொடுத்து தாங்குவது நட்பின் உன்னதம்! அக்கறை கொண்ட நண்பர்களை தவறாகப் புரிந்து கொண்டு, வேதனையுற்ற அவன் இறுதியில் தெளிந்து நெகிழ்வது நிறைவை தருகிறது.
மாதவனின் அம்மா, சுகுணா, நிர்மலா என பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப் பட்டிருந்தாலும், கனம் பெறுவதென்னவோ... ஆண் மையக் கதையோட்டப்படிதானே பாத்திரப் படைப்புகளும்.
சுய சரிதையை விட நம் வாழ்வின் கடந்து வந்த பாதையில் மனம் கவர்ந்தவற்றை பல புதினங்களாக்குவது மேல் என்று எண்ணச் செய்கிறது நூற்பொதிவு.
* ('சங்கு' இதழாசிரியர் திரு.வளவ.துரையன் அவர்தம் நூலுக்கான எனது வாசிப்பனுபவத்தை மின்னஞ்சல் செய்திருந்தேன். அவர் அதை சுருக்கி 'காக்கை சிறகினிலே' இதழுக்கு அனுப்பியிருக்கிறார். (நன்றி ஐயா!) அவர்கள் தம் பங்குக்கு சற்றே சுருக்கி இதழின் ஒருபக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர். முழுமையான பதிவு இது.)
*நன்றி: 'காக்கை சிறகினிலே' ஏப் . 2014

வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அச்சில் ஏறியமைக்கு
ReplyDeleteமிக அழகாக வாசிப்பனுபவத்தை தமிழால் சிறைப்பிடித்திருக்கிறீர்கள் நிலா. வாசிக்காத எங்களுக்கெல்லாம் அந்த புத்தகம் பற்றிய முழுமையான பார்வை கிட்டி இருக்கிறது.
ReplyDelete‘கழுத்திலிருந்து வந்த மாலை ஓய்வெடுத்துக் கிடந்தது’, ‘கருவியில் மாட்டிக் கொண்ட ஒலிநாடா போல்' - நானும் ரசித்தேன் நிலா. அழகு அது!
‘சாயங்காலம், சாயுங்காலம், சாயந்திரம்' / என்ன அழகான தமிழ்!
ஒருவர் பார்த்துப்பார்த்து உருவாக்கிய / செதுக்கிய தமிழ் ஓவியங்களில் / உருவங்களில் மற்றவர்கள் - உரிமை இருக்கின்ற பொழுதிலும் கூட தங்கள் செளகரிகங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யக் கூடாது இல்லையா நிலா?
இதற்காகவே நான் ஆக்கங்களைச் சஞ்சிகைகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்திருக்கிறேன். நல்ல வேளையாக வாசகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நல்ல களம் இணையத்தால் கிடைத்திருக்கிறது.அதன் நிமித்தம் நல்ல வாசிப்பனுபவமும் சகலருக்கும் வாய்த்திருக்கிறது.
வாழ்த்துக்கள் நிலா!
வாழ்த்துகள்....
ReplyDeleteசிறப்பான புத்தகம் பற்றிய உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.