நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

தாய்மையின் த‌விப்பு...

Sunday, 17 June 2012
அதிகாலைப் பொழுதொன்றில்
அய‌ர்ந்து தூங்குகிறாள்
தாய்ப்பால் ம‌ற‌க்க‌த் த‌வித்த‌ழுத‌ ம‌க‌ள் ...

அவ‌ள் கைக‌ளுக்குள்
த‌லையணை உருவில் நான்!
ம‌ல்லிகை, வேப்பிலை, மாத்திரை தாண்டியும்
க‌ன‌த்துக் கிட‌ந்த‌தென் மார்பு!

புழ‌க்க‌டையில் ம‌டிக‌ன‌ம் தாளாது கால்மாற்றி நின்று
'அம்மா'வென‌ க‌ல‌ங்கிக் க‌ரைந்த‌ர‌ற்றும் செவ‌லைப் ப‌சு...
வைக்கோல் க‌ன்றால் ம‌டிசுர‌ந்த‌
ப‌சும்பால் நுரைத்து வ‌ழியுமென் கைப்பாத்திர‌த்தில்!!

க‌ன்றிழ‌ந்த‌ தாய்ப்ப‌சுவுக்கும்
பால் சுர‌ப்பு நிற்க‌
மாத்திரை தேடுவ‌தில்லையே நாம்...!

உட‌ல்நோவும்
உயிர்நோவும்
ச‌க‌ உயிர்க்கும் உண்ட‌ன்றோ...!

த‌வித்துத் த‌டுமாறுமென்னை
வேடிக்கை பார்க்க‌
கிழ‌க்கில் உதிக்கிறான் ப‌க‌ல‌வ‌ன்.

10 கருத்துரைகள்:

 1. உட‌ல்நோவும்
  உயிர்நோவும்
  ச‌க‌ உயிர்க்கும் உண்ட‌ன்றோ...!

  இந்த ஞானம் வந்தால் பின் வேறெது வேண்டும்..

 1. This comment has been removed by the author.
 1. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரின் ஊர்க்காரர் நீங்கள். அதே இளகும் கடவுள்த்தன்மை உங்கள் வரிகளிலும், மனதிலும்.

  சிபிக்கு ஒரு வருடம் கழிந்ததா? இருக்கும் நாட்களும் இதோ இதோ என்பதாய் ஓடிக்கழியும் நிலாமகள்- சிபிக்கு நல்ல வாழ்க்கை அனுபவத்தையும், எங்களுக்கு நல்ல பல கவிதைகளையும் தந்து.

 1. சீனு said...:

  //தாய்மையின் த‌விப்பு...//

  தலைப்பை சாதாரனமாய் பார்த்தேன்,ம் படித்து முடித்ததும் நான் சாதாரணன் ஆனேன். பிற உயிரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் தாய்மை என்பதை அழகைக் கூறி இருகிறீர்கள்

 1. தாய்மையின் த‌விப்பு...
  எல்லா உயிரினங்களும் கொள்ளும் தவிப்பு!! !

 1. ஈரமிகு தாய்மையின் வரிகள்.

 1. vasan said...:

  "உயிர்க‌ளிட‌த்து அன்பு வேண்டும்",
  க‌ருணையையும், ஆத‌ங்க‌த்தையும்
  அதனோடு க‌லந்திருக்கிறீர்க‌ள்.

 1. உங்கள் கவியழகை பார்த்த போது யாழ்ப்பாணத்தில் 1995ல் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது நிலா.

  ஊர்விட்டு உயிர் தப்ப நிரந்தரமாக ஓடிய ஒரு பொழுது. தாய்ப்பசுவும் கன்றும் பால் கறப்பதற்காகப் பிரித்துக் கட்டப்பட்டிருந்தன.

  ஒரு தாய் அழுதாள். ஐயோ! அந்தக் குழந்தைக் கன்றை அவிழ்த்து விட மறந்து போனேனே!

  என்னவாகியிருக்கும் அவை?

 1. ஆ என்பதே அனைத்தும்

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar