இன்று + 2 தேர்வு எழுதப் புகும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அன்பு வாழ்த்துகளும் ப்ரார்த்தனைகளும்...!
பெற்றோர்களுக்கு இந்நாள் அக்குழந்தைகளை இரண்டாம் தடவை பிரசவிப்பது போலொரு நிலை...!
எப்படியென இன்னொரு பதிவில் விரைவில்!
*********
நெல்லூரிலிருந்து நேற்று மாலை சிபியிடம் தொலைபேசினோம். அவனுக்கும் தேர்வு நேரம். அவர்கள் பள்ளியிலிருந்து வெளியே பயணித்து வேறு பள்ளியில் தேர்வு மையமிருப்பதில் வெகு கொண்டாட்டம் அவனுக்கு. (பள்ளி வளாகத்தில் அடைபட்டுக் கிடந்த பிள்ளைகளுக்கு பள்ளிப் பேருந்தில் வெளியே போவதும் வரும்போது ஷாப்பிங் சென்று வருவதும் என கும்மாளம்...
தேர்வுக்கான இறுக்கம் தளர்ந்து போவதில் எங்களுக்கும் மகிழ்வு.
மார்ச் 2 தொடங்கிய தேர்வு, மொழிப் பாடங்களைக் கடந்து நேற்று கணிதம் முதல் தாள். எப்படியிருந்ததென விசாரிக்கவும், அப்பா போலவே சுவாரஸ்யமாக விவரித்தான் பிள்ளை.
“1 ஏ மேத்ஸ்க்கு ஒரு நாள் தானம்மா படிக்க நேரம் இருந்தது. சரியாக முடிக்க முடியாத சங்கடத்தோடே போனேன். தேர்வு தொடங்கியதிலிருந்தே என் தெலுங்கு ஃப்ரெண்ட் சூர்ய தேஜாவோட சித்தி எக்ஸாம் செண்டருக்கு கோயில் குங்குமத்தோட வந்து எல்லோருக்கும் இட்டு விடுவாங்க. எக்ஸாம் முடிச்சு வெளிய வரும்போதும் ஏதாவது சாப்பாடு செஞ்சி வந்தோ, இல்லை... தின்பண்டம் வாங்கியோ தயாரா வெச்சிருப்பாங்க. எல்லோருக்கும் ஊட்டி விடுவாங்க.
இன்னைக்கு அவங்களையும் காணோம். மனசே சரியில்லாம இருந்தேன். கடைசி நேரத்தில் எக்ஸாம் ஹாலுக்கு போகுமுன் ஓடி வந்துட்டாங்க. அவங்க குங்குமம் இட்டதும் தெம்பா எழுதிட்டு வந்தேன்.”
ஜனவரியில் பொங்கல் விடுமுறைக்கு வந்து போனவனைப் பார்க்காமல் கண்பூத்துக் கிடக்கிறோம். எல்லாப் பெற்றோரும் போய் பார்த்து வர, ‘வராதீங்க. வந்தா ஏக்கமாகிடும். வீட்டு நினைவு குறைய மூணு நாளாகும். தேர்வு முடிஞ்சு நானே வந்துடறேன்' என்ற அவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு போகிறவர்களிடம் வேண்டியது கொடுத்து விட்டு, பிரார்த்தனைகளுடன் ஆற்றமாட்டாமல் கிடக்கும் எங்கள் மனசில் பால் வார்த்தாங்க தேஜா சித்தி!
மானசீகமாக வணங்கினேன் அவங்களை.
தன் குழந்தைகளுக்கும் மேலாக தன் சகோதரி குழந்தைகளிடம் அன்புமேலிட இருக்கும் ‘சித்தி' களால் நிறைந்தது இப்பெண்கள் உலகம்!
பெண்கள் தின வாழ்த்துகள்!

பெண்கள் தினம் அன்று ஒரு நல்ல பெண்மணி பற்றிய நற்பகிர்வு.... இது போன்ற நல்ல சிந்தனை கொண்டவர்கள் இன்னும் இருப்பதில் மகிழ்ச்சி...
ReplyDeleteஉங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்த்கள்...
இன்று + 2 தேர்வு எழுதப் புகும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அன்பு வாழ்த்துகளும் ப்ரார்த்தனைகளும்...!
ReplyDeleteசர்வ தேச சந்தோஷ மகளிர் தின வாழ்த்துகள் தங்களுக்கு...
ReplyDeleteமகளிர் தின சிறப்புப் பதிவு
ReplyDeleteமிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இன்று + 2 தேர்வு எழுதப் புகும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அன்பு வாழ்த்துகளும் ப்ரார்த்தனைகளும்...!
ReplyDeleteபெற்றோர்களுக்கு இந்நாள் அக்குழந்தைகளை இரண்டாம் தடவை பிரசவிப்பது போலொரு நிலை...!
நிதர்சனமான உண்மை...
சர்வ தேச சந்தோஷ மகளிர் தின வாழ்த்துகள்
ReplyDeleteபெண்மையும் தாய்மையும் ஒன்றுகலக்குமிடம்! மகளீர் தினத்துக்கும் பொருத்தமாக அமைந்து விட்டது.
ReplyDeleteதாய்மை கனிந்த பெண்மைக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்!
உங்கள் மன அவஸ்தை தாய்மையின் உணர்வோடு பதிவாகியிருக்கிறது நிலா.வாழ்த்துகள் !
ReplyDeleteஇப்படியொரு அன்பான மனுஷியா!
ReplyDeleteதேஜாவின் சித்தி நெகிழ வைக்கிறார்.
எல்லா பிள்ளைகளுக்கும் குங்குமம் இட்டுக்கொள்ளத்தருவது
என்பது எத்தனை நல்லெண்ணத்தோடு தருவதாகிறது என்பதை
எண்ணிப்பார்க்கையில் அந்த சகோதரியை மெய்யாகவே
வணங்கிடத்தோன்றுகிறது.
பெண்கள் தின நல்வாழ்த்துகள் இரு சகோதரிகளுக்கும்!
தேஜாவின் சித்தி பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ReplyDeleteபரீட்சை எழுத்து அனைத்தும் மாணவ மணிகளுக்காக எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
தன் குழந்தைகளுக்கும் மேலாக தன் சகோதரி குழந்தைகளிடம் அன்புமேலிட இருக்கும் ‘சித்தி' களால் நிறைந்தது இப்பெண்கள் உலகம்!
ReplyDeleteஅன்பு சித்திக்கட்டும் எல்லோருக்கும்.
தேஜோ வின் சித்தி போன்றவர்கள் இருப்பதால் தான் ஓரளவிற்காவது மழை பொழிகிறது...
ReplyDeleteஏக்கம் நிறைந்த பிள்ளை என்பது வீட்டிலிருந்து ஒருவரும் வரவேண்டாம் என்று சொன்னதில் மட்டுமல்ல, நண்பனின் சித்தியைக் காணாமல் தவித்தத் தவிப்பிலும் புரிகிறது. நல்லபடியாகத் தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெற என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசித்தி என் தெய்வம்.
ReplyDelete