நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

வெற்றியைக் கைப்பற்றுவோம்!

Tuesday, 6 March 2012
       சாதாரண மனிதனை சாதனை மனிதனாக, சரித்திர மனிதனான வெற்றிபெறச் செய்யும் சமன்பாடாக திரு. செண்பகராஜனின்
            
           தன்னம்பிக்கை+முயற்சி+கடின உழைப்பு=வெற்றி
என்ற கோட்பாட்டைத் தாங்கிய சுயமுன்னேற்ற நூல் 'வெற்றி உங்களை அழைக்கிறது'.
        
         ‘You should be updated; Otherwise you will be outdated!'என்ற கருத்தை பல தளங்களில் அழுத்தமாக விளக்கிச் செல்கிறார்.
        
          குழந்தைப் பருவத்திலிருந்து நல்லொழுக்கத்துடன் நெறிப்படுத்தப் படுபவர்கள் சாதனைச் சிகரமடைவது சுலபமே என்றும்,

         ஊக்குவிப்பு என்னும் ஊட்ட மருந்து செலுத்தப் படாத குழந்தைகள் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும், சமூக விரோதிகளாகவும் உருமாற வாய்ப்பு அதிகம் உள்ளதென்றும்,

         மனிதம் என்னும் நெற்பயிர் செழித்து வளர, இயற்கை உரமாவது ஊக்குவிப்பே என்றும்,

        நல்ல மனித உறவுகள் தான் ஒருவரின் வெற்றிக்கு துணை செய்யும் என்றும் தெளிவுபடுத்தும் நூலாசிரியர்,

        தனது தனித் திறன்களைக் கண்டுணர்ந்து அவற்றைப் பொலிவு பெறச் செய்து, 1+1=11 என்ற சமன்பாட்டை சாத்தியப்படுத்த இந்நூல் வாயிலாக முனைகிறார்.

         வெற்றிக்கான தூண்டல்களாக இவர் குறிப்பிடும்

       *இலட்சியங்களைத் தீர்மானித்தல்

       *நல்ல மனப்பான்மை

       *புதுப்பித்துக் கொள்ளுதல்

       *வித்தியாசமாகச் சிந்தித்தல்

       *உயரிய நோக்கத்தைக் கனவு காணுதல்

       *ஆக்கப் பூர்வ சிந்தனை

       *மொழியாளுமையை வளர்த்துக் கொள்ளுதல்

       *நிறைய வாசித்தலால் அறிவை விரிவாக்கல்

       *மனித நேயம்
ஆகியவை நாம் எப்போதும் நினைவில் நிறுத்தத் தக்கவை.

        இப்படியான நூல்களைப் படிப்பதால் என்ன பயன்?

        பலனடைந்தவரே முன்னுரையில் (குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம்) தெளிவாக விளக்குகிறார்.

         நூலின் பல இடங்களில் சினிமா மற்றும் நாட்டு நடப்புகளில் பிரபலமாக்கப் பட்டவற்றை காணமுடிகிறது. அவர் சொல்வதுபோல், நாம் விரும்பியோ விரும்பாமலோ நம் புலன்களை ஆக்கிரமித்துக் கிடக்கும் அவற்றை தன் கருத்துகளை அறிவுறுத்த பயன்படுத்திக் கொள்வதும் தவறல்ல. அளவான மசாலா உணவின் சுவை கூட்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

       பெருந்தலைவர்கள், சாதனையாளர்கள், திரைத் துறையினரின் படங்களும், அவர்களின் சிறப்புகளும் காட்டிச் செல்வது நூற்பொருளை பலப்படுத்துவதாய் உள்ளது. காமராஜருக்கும், குற்றாலீஸ்வரனுக்கும்; கமலுக்கும், சச்சினுக்குமிடையே நம் படமும் இடம்பெற வேண்டுமென்ற உத்வேகத்தை மாணவர்களிடம் துண்டும்படி செண்பகராஜனின் எழுத்துநடை வசீகரிக்கிறது.

       பழமொழிகள், அறிஞர்களின் சொல்லாடல்களைத் தக்க இடங்களில் கையாண்டிருப்பது அழகு.

      ‘கற்றது கால்குலேட்டர் அளவு; கல்லாதது இண்டர்நெட் அளவு' என்ற இவரது புதுமொழியும் ரசிக்கத் தக்கது.

         ‘பொழுது பார்க்கும் கருவி, இங்கு பழுது பார்க்கப்படும்' என்ற கடிகாரம் பழுது பார்க்கும் கடையின் வாசகம் மூலம், எதையும் புதுமையாக மாற்றி யோசித்து செய்வதில் மக்கள் கவரப்படுகிறார்கள் என்று காட்டி நின்றது அறிவார்ந்த செயல்.

        வாசிப்போரின் வெற்றிப் பயணத்தில், ஏதேனும் ஓர் தருணத்தில், தனது நூல் வரிகள் வெற்றிப் படிக்கட்டாகி உதவ வேண்டுமென்ற திரு. செண்பக ராஜனின் ஆவலும், ஆர்வமும் போற்றுதற்குரியது!

நூற்பெயர் :        வெற்றி உங்களை அழைக்கிறது
நூலாசிரியர்:     ‘நீல நிலா' செண்பகராஜன்
வெளியீடு:         கந்தகப் பூக்கள் பதிப்பகம்
                                    120. குட்டியனஞ்சான் தெரு,
                                    சிவகாசி- 626 123.
பேச:                     9843677110
விலை: ரூ.80/-

         

4 கருத்துரைகள்:

  1. நல்ல சிந்தனைகளும் சீரிய கருத்துக்களும் அடங்கிய புத்தகத்துக்கு அழகான விமர்சனம். விமர்சனமே புத்தகம் வாங்க அழைக்கிறதே... பிரமாதம் நிலாமகள்.

  1. நல்லதொரு விமர்சனம்.

  1. ‘கற்றது கால்குலேட்டர் அளவு; கல்லாதது இண்டர்நெட் அளவு' என்ற இவரது புதுமொழியும் ரசிக்கத் தக்கது.

    புத்தக விமர்சனமே படிக்கத் தூண்டுகிறது.

  1. நல்ல விமர்சனம் சகோ....

    //‘கற்றது கால்குலேட்டர் அளவு; கல்லாதது இண்டர்நெட் அளவு' // அட இந்தப் புதுமொழி நல்லா இருக்கே....

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar