15 கருத்துரைகள்
 1. உண்மையாகவே தனாவால் பழையபடி சரளமாகப் பேச முடியவில்லை.

  ஒரு குருத்தை நசுக்கிப் போன வாழ்க்கையின் பதிவு மனசில் கனம் சேர்க்கிறது. தனா மீண்டும் மலர்ச்சி பெற என் பிரார்த்தனையும்.

  ReplyDelete
 2. இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் நான் மீள
  அற்புதம் நிலா

  ReplyDelete
 3. மிகவும் அற்புதமான எழுத்துக்கள், மேடம். எனக்கு தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வரியிலும் ஒரு பெண்ணின் உணர்வுகளை, உணர்ச்சிகளை, கஷ்டங்களை எவ்வளவு அழகாக ஆழமாக பதிவு செய்திருக்கிறீர்கள்! தனாவின் நிலைமை என்னை அழ வைத்து விட்டது.

  மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். ஒரு நல்ல பாடத்தை இந்தப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள். vgk

  ReplyDelete
 4. சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.உணர்வுகள் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அருமையான உளவியல் கதை இது! நிறைய குழந்தைகளின் ஆர்வங்கள், கனவுகள் இப்படித்தான் பெற்றோரின் தனிப்பட்ட ஆசைகளால் சிதிலங்களாகின்றன! அதை அழகான நடையில் எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள் நிலா!

  ReplyDelete
 6. எங்கும் எதிலும் தொய்வில்லாமல் அருமையாக சென்றது... கதையுடன் ஓடிய அனுபவம் கிடைக்க செய்ததற்கு நன்றி... இந்த கதையா வம்சி சிறுகதை போட்டிக்கு பரிந்துரை செய்கிறேன்...

  ReplyDelete
 7. அற்புதமான கதை. சில சமயங்களில் அப்பா-அம்மாவுக்கும் பாடம் புகட்ட வேண்டியிருக்கிறது...

  நல்ல கதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 8. ம்....ஏதோ தாங்கள் பெற்றதால் தங்கள் பிள்ளைகளைத் தங்களடிமைகளைபோல நடாத்தும் பெற்றவர்களுக்கு நல்ல ஒரு அடி !

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. இன்று 90 சதவிகிதம் பெற்றோர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள். - பிள்ளைகளுக்கான கனவை தாங்கள் கண்டு கொண்டு.
  நிதர்சனம் நிரம்பிய அருமையான கதை. --

  ReplyDelete
 11. எனக்கு என்ன பிடிக்கும்னு எங்க அம்மாவிற்குக் கூட தெரியாதுடி என்று தனா மிருதுவிடம் சொல்லும் போது எனக்கு அழுகையே வந்து விட்டது...மேம், நிஜமாகத் தான் சொல்கிறேன்..என்னுள் எழுந்த கவிதை இதோ:
  ஏசுவும் குழந்தைகளும்
  ஒன்று தான் - ஏனென்றால்,
  அவர்கள் பிறருக்காகத் தான்
  சிலுவையை சுமக்கிறார்கள்..


  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 12. மனம் கனத்துவிட்டது நிலாமகள். தங்கள் கனவையும் ஆசைகளையும் பிள்ளைகளின் மேல் செலுத்தி அவர்களது கனவையும் ஆசைகளையும் நசிக்கும் பெற்றோருக்கு சரியான சவுக்கடி. இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள், ஒன்று தனாவைப்போல் அடங்கி முடங்கிப் போய்விடுகிறார்கள் அல்லது கட்டுப்பாட்டை விட்டறுத்து தகாத வழியில் செல்லத் தள்ளப்படுகிறார்கள். இரண்டுமே வேதனையான நிகழ்வுகள். எழுத்துநடை கடைசிவரை கட்டிப்போடுகிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. "அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா" என வேண்டுகோள் விடுத்து
  பதிவிட்டுள்ளேன்.வருகை தந்து எனது கருத்துக்கு வலுவூட்டும்படி அன்போடு அழைக்கிறேன்.

  ReplyDelete
 14. பல குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. நல்ல உரையாடல் வன்மை இக்கதையில் தெரிகிறது. ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத பெற்றோர்கள் உணரவேண்டிய கதை இது. நடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் இதுபோன்ற கதையம்சம் பொருந்திய கதைகளை. வாழ்த்துக்கள்.
  கண் செருகுதல் என்பதுதான் சரி செறுகுதல் அல்ல.

  ReplyDelete
 15. @ரிஷ‌ப‌ன் சார்...

  உட‌ன‌டி வ‌ருகையும் க‌தையுட‌ன் ஒன்றி த‌னாவுக்காக‌ ப்ரார்த்தித்த‌தும் நெகிழ்வாய் என்னுள்.

  @ இரா. எட்வின் சார்...

  தோழ‌ர்... நீங்க‌ போய்... என்னை விய‌ப்ப‌து... சிர‌ம்தாழ்த்தி பெருமித‌முறுகிறேன்.

  @ வை.கோ. சார்...

  உங்க‌ பாராட்டும் புக‌ழுரையும் நெளிய‌ச் செய்கிற‌து என்னை. மிக்க‌ ந‌ன்றி!

  @ ச‌ண்முக‌வேல் ஐயா...

  உற்சாக‌மூட்ட‌க் கூடிய‌ ந‌றுக்கான‌ க‌ருத்துரைக்கு ந‌ன்றி!

  @ ம‌னோ சாமிநாத‌ன்...

  குதூக‌ல‌மூட்டும் த‌ங்க‌ள் சொற்க‌ள் மேலும் என்னை ஊக்குவிப்ப‌தாக‌வும் இருக்கின்ற‌ன‌ ச‌கோத‌ரி...இக்க‌தை நாய‌கி என‌க்காக‌ எத்த‌னை வ‌சிஷ்ட்ட‌ர்க‌ளை வ‌ர‌வ‌ழைத்து விட்டாள்!

  @ சூர்ய‌ஜீவா...

  பாராட்டுக்கும் ப‌ரிந்துரைக்கும் ம‌கிழ்வும் ந‌ன்றியும்! வ‌ம்சி சிறுக‌தைப் போட்டி ப‌ற்றி மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ள் என‌க்குத் தெரிய‌வில்லையே...

  @வெங்க‌ட் நாக‌ராஜ்...

  உண்மையாக‌வே ச‌கோ... க‌வுன்சிலிங் போய் வ‌ருப‌வ‌ர்க‌ளின் அனுப‌வ‌ம் கேட்டால் இப்ப‌டித் தான் இருக்கிற‌து. புகார் சொல்ப‌வ‌ர்க‌ள் தான் குற்ற‌வாளியாகி விடுகிறார்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளில்.
  குழ‌ந்தைக‌ளிடையே பிண‌க்கு வ‌ந்தால் முத‌லில் அழுது ஆர்ப்பாட்ட‌ம் செய்து கிடுகிடுக்க‌ச் செய்யும் குழ‌ந்தைதான் முத‌லில் ச‌ச்ச‌ர‌வுக்கு ஆணிவேராய் இருக்கும்!

  த‌ங்க‌ள் தொட‌ர் வ‌ருகை த‌னித் தெம்பு என‌க்கு!

  @ ஹேமா...

  ம்ம்ம்... என்ன‌ செய்வ‌து தோழி...?! அவ்வ‌ப்போது வேண்டியிருக்கிற‌து இப்ப‌டியான‌ சுக்குமாந்த‌டிக‌ள்!

  @ இர‌த்தின‌வேல் ஐயா...

  என்னையும் அவ்வ‌ப்போது முக‌நூலுக்குள் ஏற்றிவிடும் த‌ங்க‌ள் அன்பும் அக்க‌றையும் போற்ற‌த்த‌க்க‌தே!

  @ சிவ‌கும‌ர‌ன்...

  ஆமா சிவா. அப்ப‌டியான‌ யாரேனும் ஒருவ‌ரின் ம‌ன‌சையேனும் ச‌ற்று அசைத்துப் பார்க்க‌ நேரிட்டால் அதுதானே இக்க‌தையின் காத்திர‌த்துக்கு க‌ம்பீர‌ம்!

  @ ஆர். ஆர். ஆர். சார்...

  த‌ங்க‌ள் எழுத்துக்க‌ளால் எங்க‌ளைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க‌ச் செய்யும் நீங்க‌ளும் வை.கோ.சாரும் அழ‌ச் செய்த‌ த‌னாவின் ப‌ரிதாப‌த்தை என்னென்ப‌து? க‌விதை‌ ப்ர‌மாத‌ம் சார்!

  @ கீதா...

  த‌ங்க‌ள் ச‌ரியான‌ புரிந்துண‌ர்வு என் எழுத்துக்குப் ப‌க்க‌ப‌ல‌மாகிற‌து ச‌கோத‌ரி. எழுத்துல‌கில் பிர‌காசிப்ப‌வ‌ர்க‌ளெல்லாம் மின்மினியொத்த‌ என‌து எழுத்தை பாராட்டி ம‌கிழ்வ‌து தாய‌ன்பில் உச்சி முக‌ர‌ப்ப‌டுவ‌து போன்ற‌தொரு ப‌ர‌வ‌ச‌த்தை விதைக்கிற‌து என்னுள்.

  @ ஹ‌ரிணி ஐயா...

  த‌ங்க‌ள் க‌ருத்துரை என்னை மேலும் செம்மைப்ப‌டுத்துவ‌தாய் இருக்கிற‌து. பிழையை திருத்திக் கொள்கிறேன். யானைப‌ல‌ம் உண‌ர்கிறேன் த‌ங்க‌ள் அனைவ‌ர‌து பாராட்டாலும்!

  ReplyDelete