நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சந்தை முடிந்த மறுநாள்

Tuesday, 15 June 2010

அழுகிய தக்காளிகள், காய்கறித் தோல்கள்,
உரித்தெரிந்த தேங்காய் நார்கள்,
விட்டெறிந்த முற்றல்கள், சொத்தைகள்,
வியாபாரிகளின் பசிதின்ற
பஜ்ஜி, போண்டா மடித்த காகிதக் குப்பைகள்
உடைந்து கிடக்கும் பழமடுக்கிய குழித் தட்டுகள்
ஏலம் போன வாழைப்பழங்களின் வெற்றுத் தார்கள்
கிழங்குகளை போர்த்தி வந்த இலைதழைக் குவியல்கள்
சணல் பிய்ந்து துண்டான கோணிகள்
கரும்புச் சக்கைகள்
கருவாட்டு மிச்சங்கள்
நொறுங்கிக் கிடந்த ஓட்டை வளையல்கள்

நகரின் ஒரு வாரத் தேவைக்கு
விலைபோன காய்கறிகள்
குளிர் சாதன பெட்டிகளில்
சவ்வுத் தாள்களுள் சத்தமின்றிப் பதுங்க
சந்தை முடிந்த மறுநாள்
மிச்சம்மீதி எச்சங்களை
கூட்டிப் பெருக்கிக் கொளுத்துகிற
துப்புறவாளனின் பசியாற்றுவதென்னவோ
பழங்கஞ்சியும் உப்பு நாரத்தையும் தான்!

4 கருத்துரைகள்:

  1. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

  1. மிக்க நன்றி நண்பர்களே , வருகைக்கும் -வாழ்த்துகளுக்கும்

  1. சந்தையின் மறு நாளை கண்முன்னே கொண்டு வருகின்றன எழுத்துக்கள்!

    இராணுவம் வந்து போய்விட்ட மறுநாள் ஊர் போய் பார்த்தேன் ஒரு நாள். அதுவும் இப்படித் தான் இருந்தது. ஆனால் அங்கு சிந்துண்டு கிடந்தவை வேறு அவை வேறு!!

    ஏனோ அது ஞாபகம் வந்து தொலைக்கிறது.துக்க நினைவுகளோடு.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar