நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

அடி பொலி!

Wednesday, 27 July 2016


இருக்கையில் அமர்ந்திருந்த கொசு
திடுமென்ற மின்விசிறி சுழற்சியால்
எழுந்து படபடத்து சுழல்கிறது

மறுபடி நினைவூட்டப்பட்ட
மறந்துபோனதொரு
வலிமிகு பொழுதைப் போல

ரீங்காரமிட்டபடி
ரத்தம் முழுக்க
உறிஞ்சியெடுக்கும்
தீராக்குரோதமுடன்
சுழலும் இக்கொசுவுக்கு
சற்றும் சளைத்ததில்லை
அந்நினைவுகளின் கொக்கரிப்பு

நசுக்கியெறி உன் வலிக்கொசுவை.
மகிழ்ச்சி!

10 கருத்துரைகள்:

 1. அப்படியெல்லாம் கொசுவை நசுக்குவது போல வலி மிகுந்த நினைவுகளை நசுக்கியெறிந்து விட முடிந்தால் எத்தனை சுகமாக இருக்கும்!

  கவிதை அருமை நிலாமகள்!

 1. கவிதை அருமை.

  மேலே முதலில் அந்த மேடம் சொல்லியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

 1. அருமை... நினைவுகளை நசுக்கி எறிவோம்... நடந்தால்.... மகிழ்ச்சி!

 1. @மனோ சாமிநாதன்
  'காலா, என் காலருகே வாடா; சற்றே மிதிக்கிறேன்' என்ற கவிக் கர்வ தொனியாக எடுத்துக் கொள்ளலாம். நன்றி சகோதரி.

 1. @வை.கோபாலகிருஷ்ணன்
  எதிரியின் பலத்தை அதீதமாக மதிப்பிட்டால் களத்தில் இறங்கவே தயக்கமாகிறதே...
  உங்களை எல்லாம் வலைப்பக்கம் காண்பதே ஒரு மகிழ்ச்சி!

 1. @வெங்கட் நாகராஜ்

  அதேதான் கவிதையின் அடிப்படை. நன்றி சகோ...

 1. ரசித்தேன் நிலா!
  அந்த கடைசி இருவரிகள் எதற்கு?
  (அந்தக் கொசுவை தனியே அடித்துக் கொள்ளுங்களேன்!)

 1. @மோகன்ஜி

  வாங்க ஜி!

  அந்த கடைசி இருவரிகள் எதற்கு?//

  நல்ல கேள்வி.

 1. ஆகா அருமை.
  கவலை வருகிறது அந்தக் கொசுவை வலிக்காமல் அடிக்க வேண்டுமே என்று

 1. 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே' என்று படித்த நினைவில் இருக்கீங்க சிவா...:)

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar