நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

'விதி'யாவது... மண்ணாங்கட்டியாவது...

Sunday, 24 May 2015

அந்தி சாயும் நேரம்.

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவின் ஒரு 'குளம்' வரை செல்லவிருக்கும் பேருந்து வெளியேறி வேகமெடுத்தது.

பேருந்துக்குள் பெரும்பான்மை மலையாள மொழிக் குரல்கள் அப்போதைக்கப்போது. வாக்மேன்களும், எஃப்.எம்.களும், மெலிதான சத்தத்தில் லேப்டாப் மற்றும் நவீன ரக போன்களில் ஓடும் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் என அவரவர் தீவில் அவரவர்...

பாண்டி எல்லை முடிந்து கடலூர் எல்லை துவக்கத்தில் ஒரு பரிசோதனைச் சாவடி. வண்டியை மறித்து திடுதிடுவென உள்நுழைந்தனர் இரு காவல்துறையினர். எல்லா மின்னணுச் சாதனங்களும் ஓய்ந்தன.

விரைப்பான உடுப்பு. மிடுக்காக இருக்கைகளுக்கு மேல் திணிக்கப் பட்டிருந்த பைகளை ஒவ்வொன்றாய் கவனமாகப் பரிசோதனை செய்யப் பட்டது கடமை தவறாத அவர்களால். பூட்டப் பட்டிருந்த ஒன்றிரண்டு பைகளை திறக்குமாறு உத்தரவு. வம்படியாக ஒரு இளைஞனின் பையைக் கொட்டிக் கவிழ்த்து அவன் வைத்திருந்த ஜூஸ் பாட்டிலை திறந்து முகர்ந்து ஏமாற்றமுடன் அவனிடமே தந்தனர்.(உருமயக்கம்)

விட்டேனா பார் என பின்னிருக்கைப் பயணியின் பையில் மூன்று சரக்கு பாட்டிலைப் பிடித்து விட்டனர். சாவடியில் நின்றபடி பேருந்து சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்த  மற்றொரு காவலரும் வேகவேகமாக பேருந்துக்குள் வந்தார்.

'வா' என்ற அவர்களின் ஒற்றைச் சொல்லில் சற்று கூசிப் போய் மிரட்சியுடன் பின் தொடர்ந்த அந்த நவநாகரீகப் பயணியை 'இனம் இனத்தைக் காக்கும்' என்பதாக அடுத்திருந்த இருக்கைச் சேட்டன் தாழ்ந்த குரலில் தப்பிக்கும் மந்திரம் சொல்ல,  இறங்கும் வழியில் வைத்து நடந்த பரிமாற்றத்தில் பயணி திரும்பினார் இருக்கைக்கு.

கையும் பையும் நிறைத்து இறங்கிய அவர்களின் உடுப்பு விறைப்பு இழந்தது பயணிகள் பார்வையில்.

எல்லா மின்னணுச் சாதனங்களும் உயிர் பெற்றன. ஒன்று பாடியது...

"தப்பெல்லாம் தப்பே இல்லே, சரியெல்லாம் சரியே இல்லே... தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லே, தப்பு இல்லே..."

அடப் போங்கப்பா... இதெல்லாம் ஒரு பிழைப்பா...

7 கருத்துரைகள்:

 1. // 'இனம் இனத்தைக் காக்கும்' என்பதாக அடுத்திருந்த இருக்கைச் சேட்டன் தாழ்ந்த குரலில் தப்பிக்கும் மந்திரம் சொல்ல, இறங்கும் வழியில் வைத்து நடந்த பரிமாற்றத்தில் பயணி திரும்பினார் இருக்கைக்கு.//

  ‘உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பதுபோல தப்பிக்கும் மந்திர உபதேசம் தகுந்த நேரத்தில் செய்து விட்டாரோ, அந்தச் சேட்டன்.

  >>>>>

 1. // இறங்கும் வழியில் வைத்து நடந்த பரிமாற்றத்தில் பயணி திரும்பினார் இருக்கைக்கு. கையும் பையும் நிறைத்து இறங்கிய அவர்களின் உடுப்பு விறைப்பு இழந்தது பயணிகள் பார்வையில்.//

  உடுப்பு விறைப்பு இழப்பது எப்போதுமே இது மா மூ ல் தான்.

  >>>>>

 1. //"தப்பெல்லாம் தப்பே இல்லே, சரியெல்லாம் சரியே இல்லே... தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லே, தப்பு இல்லே..."//

  தப்பே இல்லாமல் ஆனால் தப்புத்தப்பா ஏதேதோ சொல்லப்பட்டுள்ளது போல சரியாய்த்தெரிகிறது. :)

  //அடப் போங்கப்பா... இதெல்லாம் ஒரு பிழைப்பா...//

  அதானே !

  ‘இதெல்லாம் சர்வ சகஜமப்பா’ என்று அவர்கள் தரப்பினில் சொல்லக்கூடும்.

  யோசிக்க வைக்கும் அருமையான ஆக்கம்.

 1. வணக்கம்

  இது சரி...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 1. "'வா' என்ற அவர்களின் ஒற்றைச் சொல்லில் சற்று கூசிப் போய்"
  - அழகு

 1. காசுக்கு விலைபோகும் காவல்... கேவலம்... கூசிக்கூனிக்குறுகவேண்டியவர்கள் நாம்தான்..

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar