சில நாட்களுக்கு முன் மனோ மேம் எனது பதிவிடுதலின் மந்தத் தன்மையை நீக்கும் விதமாக ஒரு தொடர் பதிவுக்கு அழைத்தாங்க. ஓட முடியாதவன் ஊக்க மருந்து சாப்பிட்ட கதையா நானும் முயற்சி செய்தேன். இதில் கேள்வியும் நானே; பதிலும் நானே. தோழமைப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெரியமனசு பண்ணி மன்னிச்சுடுங்க.
தோழமையின் உன்னதம்?
முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.
தோழமையின் உன்மத்தம்?
வளரிளம் பருவத்தில் மனசை நிறைக்கும் நட்பின் மீதான அபரிமித நம்பிக்கை; பிரேமை; குதூகலம்.
நட்பின் உரிமைக்கு எல்லை எது?
சுக துக்கங்களில் சரீர பிரயாசை, பொருளாதார உதவி, கூடிக் களித்தல், மனத் துயரங்களுக்கு நம்மாலான தேற்றல், ஆலோசனை.
நண்பனின் குடும்பத்தினர் முகம் சுளிக்காதபடி நம் மூக்கை நிறுத்த ஒரு எல்லை வைத்துக் கொள்வது நலம்.
நட்பு வட்டத்தில் யாரெல்லாம் இருக்கக் கூடும்?
சின்ன வயசில் பிடித்த தும்பி முதல், தோட்டத்துச் செடிகொடிகள், போகுமிடமெல்லாம் கண் நிறைக்கும் பூக்கள், வானில் பறக்கும் பறவையினங்கள், உலகைப் படைத்துக் காத்து ரட்சிப்பதாய் உருவகிக்கும் கடவுளர்கள், மற்றும் பல நேசமிகு மனிதர்கள்.
மனம் தகிக்கும் ஒரு சினேகிதியின் மரணம்?
இன்றும் அவிழாத புதிராய் எனதருமை சுகுணாவின் இறப்பு.
நிறம் மங்கிய நட்பூ?
உயிராய் எண்ணிய உஷாவின் இனம்புரியா விலகல்.
மனம் மாறிய நட்பூ?
படித்த காலத்தில் ஒத்த அலைவரிசையில் நெருங்கி, இன்று ஒரே ஊரில் வசித்தும் தொடர்பெல்லைக்கு அப்பால் தன்னை நிறுத்திக்கொள்ளும் கலைவாணி.
மணம் குன்றா நட்பூ?
வலையுலகில் அறிமுகமாகி, பின்னூட்டங்களால் நட்பைப் பரிமாறி, திடுதிப்பென சில நாட்களுக்கு முன் ஒரு முன்னிரவில் தொலைபேசியில் நலம் விசாரித்த மோகன் ஜி. http://vanavilmanithan.blogspot.in/
தினம் தினம் நினைவில் ஒளிரும் தோழமைகள்?
படித்த நாட்களில்: (ஒரு... பத்து, பன்னெண்டு பேர் இருப்பாங்களா...)
வனஜா, தமிழ்ச்செல்வி, அமுதா, கலைவாணி, சுசீலா, சுகுணா, ருக்மணி, சொர்ணாதேவி, விஜயலட்சுமி, மீனா, சுமதி, ...
திருமணமான பின்: (ஒரு... நாலைஞ்சு பேரைச் சொல்லுங்க)
உமா மஹேஸ்வரி, லதா மஹேஸ்வரி, ஹேமா நந்தினி, சண்முகவேலுத்தாய், விமலா, ...
எழுதப் புகுந்த பின்: (ஒரு... அஞ்சாறு பேர் சொன்னாப் போதும்)
உஷாராணி, சாந்தா தத், சக்தி அருளானந்தம், தனலட்சுமி, ஜுலியட் ராஜ்,
வலையுலகில்: (ம்ம்... ஒரு ஆறேழு...)
க்ருஷ்ணப்ரியா http://krishnapriyakavithai.blogspot.in/
மனோ மேம் http://muthusidharal.blogspot.in/
மணிமேகலை http://akshayapaathram.blogspot.in/
மிருணா http://cycle2live.blogspot.in/
'மணிச்சுடர்' ஜோதி http://manichudar.blogspot.in/
மதுமிதா http://madhumithaa.blogspot.in/
இராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com/
கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in/
நட்புடன் கூடுதல் மரியாதைக்குரியவர்கள்: (யம்மா, யம்மா... இத்தோட லிஸ்ட் போதும்மா)
ரிஷபன் http://rishaban57.blogspot.in/
சுந்தர்ஜி http://sundargprakash.blogspot.in/
கவிராயர் http://thanjavurkavirayar.blogspot.in/
வெங்கட் நாகராஜ் http://venkatnagaraj.blogspot.com/
மூவார் http://aaranyanivasrramamurthy.blogspot.in/
மோகன்ஜி http://vanavilmanithan.blogspot.in/
அப்பாஜி http://moonramsuzhi.blogspot.in/
வை.கோ. http://gopu1949.blogspot.in/
கண்ணன் http://kannan2771.blogspot.in/
கதிர்பாரதி http://yavvanam.blogspot.in/
அமிர்தம் சூர்யா http://amirthamsurya.blogspot.in/
நிஜம்மாவே இத்தனை பேரையும் தினம்தினம் நினைக்கறீங்களா?!
ஆமா. குயில் கூவினா உஷா பேசுறது போலிருக்கும். பக்கத்துப் பெருமாள் கோயில்ல ‘என்ன தவம் செய்தனை'ன்னு பாம்பே ஜெயஸ்ரீ பாடத் தொடங்கினா செத்துப் போயிட்டதா சொல்ற சுகுணா குரல்ல தான் மீதிப்பாட்டு கேட்கும். பீரோவில் அந்த மயில்கழுத்து கலர் சில்க் சாரி பார்க்கும்போதெல்லாம் கிருஷ்ணப்ரியா பக்கத்துல நிப்பாங்க. மீனா மிஸ் கொடுத்த ஸ்பூன் ஸ்டேண்டை 30 வருஷமா கண்ணெதிரே வச்சிட்டிருக்கேன் சமையலறையில. நெத்திக்கு இட்டுக்கும் போதெல்லாம் ருக்மணி தான் மனசுல. எல்லா ஹெல்த் செண்டர் நர்ஸும் என் சொர்ணாதான்.
சாந்தா தத் மாதிரியே இருப்பாங்க இங்க தினம் வாசல் வழியா வாக்கிங் போற ராமஜெயம் ஆண்ட்டி. (அவங்களும் என் சினேகிதிதான். அவங்க பொண்ணுக்கு என் பேரு. பார்க்கும் போதெல்லாம் பேச்சுக்கிடையே நாலைஞ்சு தடவையாச்சும் கூப்பிட்டு தூரமாயிருக்குற தன் பொண்ணு நினைப்பை தணிச்சுக்குவாங்க அவங்க)
கணினி வழியா வலையுலகம் வந்தாச்சுன்னா எல்லாப்பூ வாசலுக்கும் ஒரு எட்டு போய் வந்துடுவேன்.
இன்னும் லிஸ்ட்ல இருக்கற விடுபட்டவங்களுக்கும் சொல்வேன். தாங்க மாட்டீங்க ... யாருகிட்ட...? பொழைச்சுப் போங்க.
முடிவாக...
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'
ஆற்றைக் கடக்கிற வரை அண்ணன் தம்பி; அதற்க்கப்புறம் நீ யாரோ நான் யாரோ'
'ஒருவர் பொறை; இருவர் நட்பு'
'நண்பன் (நண்பி) தயவிருந்தால் நாடாளலாம்'
ஒளி கூட்டுக!
நட்பை விரும்பாதவர்களும் ஒரு நண்பன் கூட இல்லாதவர்களும் இவ்வுலகில் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். எனவே இந்த தொடர்பதிவைத் தொடர வலையுலக நண்பர்கள் விழைவார்களாக!
முதலில் வருபவர்... கிருஷ்ணப்ரியா. ...
எல்லோரும் ஜோரா ஒருதடவை கைதட்டுங்க!
என்னை எழுதத் தூண்டிய மனோ மேம்க்கு நன்றி!
அடடா..... நட்பு பற்றி இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த பதிவு.....
ReplyDeleteஉங்கள் நட்பு வட்டத்தில் எனக்கும் இடம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நெய்வேலி வந்து உங்களிருவரையும் பார்த்துச் சென்றது இன்றும் பசுமரத்தாணியாய் நினைவில்.....
நட்பு குறித்து எனக்கும் ஆழ்ந்த ஈடுபாடுண்டு... உங்கள் கேள்வி பதிலைப் படிக்கும் போது எனக்கும் என் நட்புகள் மனதில் மலர்ந்து சென்றனர்.... அந்த நினைவுகளுக்காய் உங்களுக்கு என் நன்றி...
ReplyDeleteஉங்களோட காய் போங்க...
ReplyDeleteமுறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.
ReplyDeleteதோழமை வட்டத்தில் எமது பெயரை பெருமைப்படுத்தியிக்கிறீர்கள்..
பறத்தல், - பறத்தல் நிமிடம் போல் மகிழ்ச்சி முகிழ்க்கிறது
நன்றி தோழி..
நட்பைப் பற்றி அழகாய் சொன்னீர்கள்.
ReplyDeleteசிறுவயது முதல் இப்போது வரை நட்புகளை நினைக்க வைக்கிறது உங்கள் பதிவு.
நட்பு வாழ்க! நட்பு நலம் காப்போம்.
தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...
ReplyDeleteமிகவும் அழகோ அழகாக ..... மென்மையாக ..... மேன்மையாக ..... எடுத்துச்சொல்லியுள்ளது அருமையோ அருமை.
நட்புடன் கூடுதல் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில்:
// வை.கோ. http://gopu1949.blogspot.in/ //
இதைப்பார்த்ததும் என் தூக்கம் கலைந்து என் துக்கங்களும் மறைந்து ஏதோ ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல என்னால் உணரமுடிந்தது.
//முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.//
தோழமையின் உன்னதமான வரிகள் .... இனிமை ! :)
பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள் ! - VGK
மா, பலா, வாழை ...புரியலையா, அட, பழம் விடுறேம்பா : ) அப்புறம் பதிலுக்கு நீங்க எனக்கு நாளைக்கு கமர்கட் வாங்கித் தந்தாப் போதும்.
ReplyDeleteநிலாத் தோழி
ReplyDeleteஎதிர்பாராமல் ஒரு பதிவு!
உங்களைப் போலத் தான் நானும் சோர்ந்து போய் இருந்தேன். உங்கள் பதிவில் நானும் சேர்ந்து கொண்டு விட்டதில் புதிதாய் ஓர் உற்சாகம் பற்றிக் கொண்டு விட்டது!
தோழமையின் அழகு அது தானோ? தூரத்தில் இருந்தாலும் தூக்கி நிறுத்தி விடுகிறது. ஏதோ ஓரிழையில் நாம் இணைகிறோம் என்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி!!
ட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள்! இத்தனை அழகான பதிவை எழுத நானும் ஒரு கருவியாய் இருந்தேனென்பது இனம் புரியாத நிறைவும் மகிழ்வும் எனக்கு!!
ReplyDeleteநட்பு பற்றி அழகழகாய் எழுதியிருக்கிறீர்கள் நிலாமகள்! இத்தனை அழகான பதிவை எழுத நானும் ஒரு கருவியாய் இருந்தேனென்பது இனம் புரியாத நிறைவும் மகிழ்வும் எனக்கு!!
ReplyDeleteஅடடா! இப்போது தான் இதைப் பார்த்தேன் நிலா. போகட்டும் அஞ்சு வருஷம் தான் ஆச்சு. ரொம்ப லேட்டில்லை... சாருக்கு என் அன்பு
ReplyDelete