நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

யாசி

Friday, 5 April 2013


பசித்தவன் உணவையும்
படிப்பவன் அறிவையும்
விதைத்தவன் இலாபத்தையும்
வலுத்தவன் பயத்தையும்
கொடுப்பவன் புண்ணியத்தையும்
கொல்பவன் பாவத்தையும்
படைத்தவன் புகழையும்
தடுப்பவன் கீழ்ப்படிதலையும்
சிந்திப்பவன் தெளிவையும்
சிரிப்பவன் மகிழ்வையும்
குடிப்பவன் வியாதியையும்
பகைப்பவன் வெறுப்பையும்
பொறுப்பவன் நன்மையையும்
துறப்பவன் நிம்மதியையும்
யாசித்துப் பெற
உன்
நேசத்தை யாசிக்குமெனக்கு
புறக்கணிப்பை ஆயுதமாக்கும்
நீ யோசித்ததுண்டா
அன்பெனும் ஆயுதம் பற்றி?!

நன்றி: தமிழ்த் தாராமதி ,மார்ச்-2013

11 கருத்துரைகள்:

 1. //உன்
  நேசத்தை யாசிக்குமெனக்கு
  புறக்கணிப்பை ஆயுதமாக்கும்
  நீ யோசித்ததுண்டா
  அன்பெனும் ஆயுதம் பற்றி?!//

  அருமை. மிகவும் அருமையாக முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  தமிழ்த் தாராமதி ,மார்ச்-ஏப்ரல் 2013 இல் வெளியானதற்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்.;)

 1. அன்பென்னும் ஆயுதம் மனதி நிறைவடையச்செய்தது

 1. அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

  தொடர வாழ்த்துக்கள்...

 1. அருமையான கவிதை சகோ.

 1. இங்கே யாசிப்பவர்கள் யாவரும் வலியவர்கள், வழங்கக்கூடியவர்கள் என்பதைப் பார்க்கையில் வரிகளின் மேன்மைக்கு ஒளியடித்தது போல..

 1. உன்
  நேசத்தை யாசிக்குமெனக்கு
  புறக்கணிப்பை ஆயுதமாக்கும்
  நீ யோசித்ததுண்டா
  அன்பெனும் ஆயுதம் பற்றி..

  ஆஹா !

 1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

 1. நேசத்தை யாசிக்குமெனக்கு
  புறக்கணிப்பை ஆயுதமாக்கும்
  நீ யோசித்ததுண்டா
  அன்பெனும் ஆயுதம் பற்றி?!//

  அது தானே ! அன்பெனும் ஆயுதம் அனைத்தையும் ஆக்க வல்லது.

 1. kannan said...:

  தோழியாரே,
  அன்பையும் அழகாக ஆயுதமாக்கும் உங்கள் கவியுணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன். கருவுடன் கர்த்தாவை இணைத்திருக்கும் விதம் அருமை. இது காதல் சிந்தனையா? இல்லை அன்பின் ஏக்கமா? ஒரு வேடிக்கையான வினோதம் - அன்பெனும் ஆயுதம், வைத்திருப்பவரைத்தான் அதிகமாக காயப்படுத்துகிறது....

  -- கண்ணன், தஞ்சையிலிருந்து.

 1. ஹ ர ணி said...:

  அன்புள்ள நிலாமகள்...

  கவிதை ஆழமானது.

  அன்பெனும் ஆயுதம்... நல்ல முரண்.. ஆனாலும் அன்பு எப்போதும் ஆயுதமாகவேண்டாம் என்பதுதான் விழைவு.

 1. ஆயுதமெறிவதாகவே இருந்தாலும் அது அன்பெனும் ஆயுதமாக இருக்கட்டும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நேசத்தின் யாசகம் தன்னிரக்கத்தோடு தொழுதது மனம் தொட்டது. பாராட்டுகள் நிலாமகள்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar