நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

தடுத்தாட்கொண்ட மழை

Tuesday, 15 May 2012
வெயில் பூத்துக் கிடந்தவொரு
அந்தி மாலை...
திடுமென சூழ்ந்த மேகம்
குளிர்ந்து மழை தருவித்தது.

நனையாமல்
பள்ளி விட்டு
வரவேணும் குழந்தைகள் ...

வழக்கமாய் கிறக்கம் தரும்
மண் வாசமும் ஈரக் காற்றும்
பாசப் பரிதவிப்பில்
ஈர்ப்பற்றுப் போனது.

மூடிய கதவும்
திறந்த சாளரமும்
சாரல் தடுக்கவும்
சாலை தெரியவும்...

சாளரம் தாண்டிய
சாத்துக்குடி மரத்தின்
நனைந்து சொட்டும் இலைகளின்
சிறு மறைப்பில்
கிளை மாறிக் கிளையமர்ந்து...
நனைந்த  சிறகுகளை
சிற்றலகால் கோதிவிட்டு
உலர்த்திக் கொண்டிருக்கும்
சிட்டுக் குருவியும்
காத்திருக்கு - தன்
கூடு சென்றடைய.

நன்றி: 'காக்கை சிறகினிலே ' மே- 2012

8 கருத்துரைகள்:

 1. அழகிய சித்திரம்!

 1. ஹேமா said...:

  தடுத்தாட்கொண்ட மழை....தலைப்பே கவிதைதான் நிலா !

 1. vasan said...:

  ஈர‌மின்றி வீ(கூ)ட‌டைய‌ ஏங்கும் ஈர‌ ம‌னசு
  ந‌னைக்கிற‌து க‌விதையை.

 1. கிளை மாறிக் கிளையமர்ந்து...
  நனைந்த சிறகுகளை
  சிற்றலகால் கோதிவிட்டு
  உலர்த்திக் கொண்டிருக்கும்
  சிட்டுக் குருவியும்
  காத்திருக்கு -

  sabaash !

 1. ஈர்ப்பற்று போனாலும் மழையின் தருணங்கள் மகிழ்ச்சியே

 1. //வழக்கமாய் கிறக்கம் தரும்
  மண் வாசமும் ஈரக் காற்றும்
  பாசப் பரிதவிப்பில்
  ஈர்ப்பற்றுப் போனது.//

  அது தானே தாய்மை!

  வழக்கம்போல் தமிழ்த்தேனில் தோய்த்தெழுதிய அருமையான வரிகள்!
  மிக அருமையான கவிதை ஆதி!!

 1. ஒரு தாயின் பரிதவிப்பை வார்த்தைகளாய் சரம் கோத்து கவிதையாக்கிய அழகை வியந்து பாராட்டுகிறேன். அருமை நிலாமகள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar